அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 21 November 2017

கலைஞனும் இரசிகனும் கைக்கோர்த்தால்...!



ண்மைய காலமாக நம்மூர் கலைஞர்கள் மத்தியில் ஓர் ஆதங்கத்தை அதிகமாகக் காண முடிகிறது.

மிழக இறக்குமதிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை உள்ளூர் சரக்குகளுக்கு ஏன் தர மறுக்கிறீர்கள் என்று!

"படம் நல்லா இருக்கா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், முதலில் திரையரங்குக்குச் சென்று பார்க்க வேண்டாமா?  தமிழ்ப் படங்கள் வந்தால் முதல் நாளே கூட்டம் கூட்டமாக போகும் நம்மவர்கள் உள்ளூர் படங்களுக்கு ஆதரவு தருவதில்லையே, ஏன் ?"

....என் காது பட கேட்டது!

அது சரியா தவறா என்ற விவாதம் இருக்கட்டும்! முதலில் நடப்புச் சூழலைப் பார்ப்போம்....

ண்டாண்டு காலமாக தமிழகத்தை நோக்கியே பயணப்பட்டு விட்டது நமது ரசிப்புத் தன்மை. அங்குள்ளவர்கள் எப்படி அங்குள்ளவர்களைக் கொண்டாடுகிறார்களோ, நாமும் அப்படியே பழகி விட்டோம். கடல் கடந்து வரும் படைப்புகளுக்கென நம் மத்தியில் ஒரு கவர்ச்சி! அதுவே, சொல்லாமலேயே நம்மை திரையரங்கங்களுக்கு ஈர்த்து விடுகிறது. நமது வாழ்க்கையில் அதுவோர் அங்கமாகவே ஆகி விட்டது.

து மாறுமா? தெரியாது!
மாறியே ஆக வேண்டுமா? அதுவும் தெரியாது!
பிறகு என்ன தான் தெரியும் என்கிறீர்களா?

து முழுக்க முழுக்க ரசிகனின் உரிமை என்பது மட்டும் நன்றாக தெரியும்!

திரையரங்குக்குச் செல்வதா இல்லையா என்பது அவரவர் உரிமை.
அங்கு எந்த படத்தைப் பார்ப்பது என்பதும் அவரவர் உரிமை.
அது உள்ளூரா வெளியூரா என்பதும் அவர்களின் உரிமையே!

தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை! .... என்னதான் , 'வேண்டுகோள்' அல்லது வெறும் 'பரிந்துரையே' என அதற்கு வேறு பெயரிட்டாலும்.....!

ம் மக்களையும் குறைத்துச் சொல்வதற்கில்லை!.
உள்ளூர் படைப்புகளை அவர்களும் ரசிக்கவே செய்கிறார்கள்.
முன்பை விட தற்போது பன்மடங்கு முன்னேற்றம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

மாற்றமெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது!
அவ்வாறே நம் படைப்புகளும்...!

ல்லாரும் மெச்சக்கூடிய வகையிலான படைப்புகள் வரும் அதே வேளை,  எதிர்பார்ப்பை அறவே பூர்த்திச் செய்யத் தவறும் படைப்புகளும் இருக்கவே செய்கின்றன. தரமான படைப்புகளுக்கு கால அவகாசம் வேண்டும் என்பது உங்கள் வாதமென்றால், ரசிகனின் மனமாற்றதுக்கும் அது ஏற்புடையது தானே!

" பணம் போட்டு படம் எடுக்கிறோம், நாங்க" என நீங்கள் சொன்னால், " பணம் கொடுத்து படம் பார்க்கிறோம், போங்க!" என ரசிகனும் சொல்லத் தான் செய்வான்.

க, ரசிகன் திரையரங்குக்கு ஏன் வருவதில்லை  என்ற தேடல்களைப் படைப்பாளிகள் தொடரலாம்!
கிடைக்கும் விடைகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த படைப்புகளைக் கொடுக்க முனையலாம்.

மாற்றங்கள் வர வர, ரசிகனும் கண்டிப்பாக தனை மாற்றிக் கொள்வான்; ஏற்றுக் கொள்வான்!

லைஞனுக்கும் ரசிகனுக்கும் இடையில் இருப்பது ஒருவித அலாதி உறவு - அது உணர்வுப் பூர்வமானது !
அடிப்படையில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியதும் கூட! 

ருவரும் ஒத்துழைத்தால் உச்சம் தொடலாம்! 

ம்புங்கள்.....
ன்றாவது ஒரு நாள், 

தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் வருகிறார், தளபதி வருகிறார் என்ற நிலையில் இருந்தோ, அல்லது அதற்கு ஈடான திருவிழாவோடோ எங்கள் ஹரிதாஸ் வருகிறார், குமரேசன் வருகிறார் என்ற நிலைக்கு நிலைமை முன்னேறும்; முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் உண்டு!

என்றுமே கடைநிலை ரசிகனாக #சிந்தித்தவேளை!

- மோகனதாஸ் முனியாண்டி

No comments: