அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Saturday, 18 August 2018

திருடாதே பாப்பா திருடாதே!




 ரண்டே வரிகளில் சொல்ல வேண்டுமென்றால்…

திருட்டுச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதைக் களம்,
பிள்ளை வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தளம்!

அடுத்து கதாபாத்திரங்களைப் பார்ப்போம்


Saresh D7
சான், சுகமாய் சுப்புலட்சுமி, திருடாதே பாப்பா திருடாதே என நடிப்பில் வளர்ந்து நிற்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் யதார்த்தமான கதாநாயகனைப் பார்த்த திருப்தி. பாசம், காதல், நட்பு, கோபம், சோகம், மோதல், நகைச்சுவை என கலந்தடிக்கிறார், இயல்பு மீறாமல்! தொடர்ந்து வாய்ப்புகள் குவியும் என தாராளமாக் கூறலாம்.  



Yuvaraj Krishnasamy
தாநாயகனுக்கும் இவருக்குமான  Chemistry படத்தின் இன்னொரு பலம். உற்றத் தோழனாக யுவராஜ் தன் பங்கை கனக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். Timing Comedy-யில் கலக்குகிறார். வசனங்களும் இவருக்குக் கைக்கொடுக்கின்றன. கதாநாயகனைப் போலவே இவருடைய முகபாவங்களும்  காட்சிக்கு ஏற்றாற் போல் ஈர்க்க வைக்கின்றன. தமிழ்ப் படங்களில் நாம் பார்த்துப் பழகிய நண்பன் கதாபாத்திரம் தான் என்றாலும், இயல்பான நடிப்பு; மண்வாசனை கலந்த வசன உச்சரிப்பின் மூலம் சபாஷ் பெறுகிறார்.



Kabil Ganesan
பார்த்துப் பழகிய பையனா என ஆச்சரியப்பட வைக்கிறார். தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக பவ்யம் காட்டும் கபிலின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டிய இயக்குநருக்கு பாராட்டுகள். விடலைப் பையனுக்கு வில்லன் செட்டாகுமா என கேட்போருக்கு, செட் ஆகியிருக்கிறது என தனது மிரட்டல் நடிப்பின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார். தந்தையுடன் மல்லுக் கட்டும் காட்சியில் அபாரம். உள்ளூர் சினிமாவுக்கு கிடைத்துள்ள புதிய நட்சத்திரம். நேரில் பாராட்டு உண்டு, விடலைப் பையா! J  


Shalini Balasundaram

னித்துத் தெரியும் குரல். வெகுளித்தனம். காதலனின் கட்டுப்பாட்டால்  சந்திக்கும் தர்மசங்கடம் என  நம்‘கீதையின் ராதை’ நிறைவாகச் செய்திருக்கிறார். இம்முறை மற்றவர்கள் score செய்ய இவர் வழி விட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.    





Hema Ji 
Irfan Zaini
P. Jegan 
Manjula 
சுட்டி சஞ்சனாவாக வரும் Hema Ji ( பாதியிலேயே தவிக்க விட்டு விட்டுச் சென்று விடுகிறார்) சிடு சிடு காதலனாக   வரும் Irfan Zaini ( இவரின் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் இன்னும் வலு கூட்டியிருக்கலாம்), பாசத் தாயாக வரும் Manjula, கபில் நட்பு வட்டம் Ramkumar, Kshipra (விரைவில் முக்கியக் கதாபாத்திரம் கிடைக்கட்டும்), கபிலின் தந்தையாக வரும் P. Jegan என அனைவரும் கொடுத்தவற்றை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். மூத்த நடிகர் KS Maniam சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார் (அது என்னமோ தெரியவில்லை, கனமான பாத்திரங்களில் மட்டுமே அவரைப் பார்க்க மனம் விரும்புகிறது) 
Ramkumar
Kshipra












பாடல்கள் & இசை

வலிக்கிறதே, நீ அருகில் போன்ற பாடல்கள் ஈர்க்கின்றன. பார்த்தால், அட நம்ம Phoneix Dasan, Ovioy Oommapathy உள்ளிட்டோர் தான் . Title Song-ங்கும் அதே ரகம் தான்.  Ztish -சின் இசையில் அதிரடி என்றில்லா விட்டாலும், கதையோடு  பாடல்கள் பொருந்துகின்றன. 

ஒளிப்பதிவும் பாராட்டுப் பெறுகிறது.  




நிறை

* வெறும் காதல் கமர்ஷியல் என்றில்லாமல் சமூக அக்கறைக்கும் முக்கியத்துவம்.

பழகிப் போன காட்சிகளை Fresh-ஷாக காட்டிய விதம்

* கனமான கதையை நகைச்சுவை கலந்த வசனங்கள் வாயிலாக நகர்த்திச் சென்ற நேர்த்தி

* முக்கிய கதாபாத்திரங்களின் பங்கு.


குறை

* படம் சற்று நீளம் தான்! காட்சிகளைச் சுருக்கியிருந்தால் சிறப்பு.

* ஷாலினி கதாபாத்திரத்தின் வெகுளித்தனத்தைக் குறைத்திருக்கலாம். அடிக்கடி அதே போன்ற வெளிப்பாடு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

* வலுவற்ற சில கதாபாத்திரங்கள் குறிப்பாக  கபிலின் தாய் ( நம்மூர் சூழ்நிலையுடன் ஒத்துப் போகவில்லை)  

* சில இடங்களில்  கருத்தை வசனங்களால் வலிய திணித்த உணர்வு;  காட்சிகள் வாயிலாகவே விட்டிருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும்.

திருடாதே பாப்பா திருடாதே = பயனுள்ள முயற்சி!

சமுதாயப் பிரச்னையைத் தொட்டு படமெடுத்த தைரியத்திற்காக வாழ்த்துகள் Shalini 

#சிந்தித்தவேளை 

No comments: