அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 21 November 2017

கலைஞனும் இரசிகனும் கைக்கோர்த்தால்...!



ண்மைய காலமாக நம்மூர் கலைஞர்கள் மத்தியில் ஓர் ஆதங்கத்தை அதிகமாகக் காண முடிகிறது.

மிழக இறக்குமதிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை உள்ளூர் சரக்குகளுக்கு ஏன் தர மறுக்கிறீர்கள் என்று!

"படம் நல்லா இருக்கா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், முதலில் திரையரங்குக்குச் சென்று பார்க்க வேண்டாமா?  தமிழ்ப் படங்கள் வந்தால் முதல் நாளே கூட்டம் கூட்டமாக போகும் நம்மவர்கள் உள்ளூர் படங்களுக்கு ஆதரவு தருவதில்லையே, ஏன் ?"

....என் காது பட கேட்டது!

அது சரியா தவறா என்ற விவாதம் இருக்கட்டும்! முதலில் நடப்புச் சூழலைப் பார்ப்போம்....

ண்டாண்டு காலமாக தமிழகத்தை நோக்கியே பயணப்பட்டு விட்டது நமது ரசிப்புத் தன்மை. அங்குள்ளவர்கள் எப்படி அங்குள்ளவர்களைக் கொண்டாடுகிறார்களோ, நாமும் அப்படியே பழகி விட்டோம். கடல் கடந்து வரும் படைப்புகளுக்கென நம் மத்தியில் ஒரு கவர்ச்சி! அதுவே, சொல்லாமலேயே நம்மை திரையரங்கங்களுக்கு ஈர்த்து விடுகிறது. நமது வாழ்க்கையில் அதுவோர் அங்கமாகவே ஆகி விட்டது.

து மாறுமா? தெரியாது!
மாறியே ஆக வேண்டுமா? அதுவும் தெரியாது!
பிறகு என்ன தான் தெரியும் என்கிறீர்களா?

து முழுக்க முழுக்க ரசிகனின் உரிமை என்பது மட்டும் நன்றாக தெரியும்!

திரையரங்குக்குச் செல்வதா இல்லையா என்பது அவரவர் உரிமை.
அங்கு எந்த படத்தைப் பார்ப்பது என்பதும் அவரவர் உரிமை.
அது உள்ளூரா வெளியூரா என்பதும் அவர்களின் உரிமையே!

தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை! .... என்னதான் , 'வேண்டுகோள்' அல்லது வெறும் 'பரிந்துரையே' என அதற்கு வேறு பெயரிட்டாலும்.....!

ம் மக்களையும் குறைத்துச் சொல்வதற்கில்லை!.
உள்ளூர் படைப்புகளை அவர்களும் ரசிக்கவே செய்கிறார்கள்.
முன்பை விட தற்போது பன்மடங்கு முன்னேற்றம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

மாற்றமெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது!
அவ்வாறே நம் படைப்புகளும்...!

ல்லாரும் மெச்சக்கூடிய வகையிலான படைப்புகள் வரும் அதே வேளை,  எதிர்பார்ப்பை அறவே பூர்த்திச் செய்யத் தவறும் படைப்புகளும் இருக்கவே செய்கின்றன. தரமான படைப்புகளுக்கு கால அவகாசம் வேண்டும் என்பது உங்கள் வாதமென்றால், ரசிகனின் மனமாற்றதுக்கும் அது ஏற்புடையது தானே!

" பணம் போட்டு படம் எடுக்கிறோம், நாங்க" என நீங்கள் சொன்னால், " பணம் கொடுத்து படம் பார்க்கிறோம், போங்க!" என ரசிகனும் சொல்லத் தான் செய்வான்.

க, ரசிகன் திரையரங்குக்கு ஏன் வருவதில்லை  என்ற தேடல்களைப் படைப்பாளிகள் தொடரலாம்!
கிடைக்கும் விடைகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த படைப்புகளைக் கொடுக்க முனையலாம்.

மாற்றங்கள் வர வர, ரசிகனும் கண்டிப்பாக தனை மாற்றிக் கொள்வான்; ஏற்றுக் கொள்வான்!

லைஞனுக்கும் ரசிகனுக்கும் இடையில் இருப்பது ஒருவித அலாதி உறவு - அது உணர்வுப் பூர்வமானது !
அடிப்படையில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியதும் கூட! 

ருவரும் ஒத்துழைத்தால் உச்சம் தொடலாம்! 

ம்புங்கள்.....
ன்றாவது ஒரு நாள், 

தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் வருகிறார், தளபதி வருகிறார் என்ற நிலையில் இருந்தோ, அல்லது அதற்கு ஈடான திருவிழாவோடோ எங்கள் ஹரிதாஸ் வருகிறார், குமரேசன் வருகிறார் என்ற நிலைக்கு நிலைமை முன்னேறும்; முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் உண்டு!

என்றுமே கடைநிலை ரசிகனாக #சிந்தித்தவேளை!

- மோகனதாஸ் முனியாண்டி

Tuesday, 14 November 2017

இன்னொரு பஞ்ச் குணாளன் வருவார்; வந்தே தீருவார்!

ஸ்ரீ முருகன் நிலையம் (SMC)-யின் இளைஞர் படை Youth Core ஏற்பாட்டிலான தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசியப் பூப்பந்து போட்டியின் அண்மைய இறுதிச் சுற்றைக் காணும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. வேலைப்பளுவினால் கடந்தாண்டு தவறவிட்ட வாய்ப்பை இம்முறை  நன்குப் பயன்படுத்திக் கொண்டேன்.

மாபெரும் இறுதிச் சுற்று என்ற முத்திரையுடன் நவம்பர் 4-ங்காம் தேதி கோலாலம்பூர் செராஸ் பூப்பந்து அரங்கில் போட்டி களைக்கட்டியது. டத்தோ பஞ்ச் குணாளன் , டத்தோ ஜேம்ஸ் செல்வராஜா உள்ளிட்ட நமது ஜாம்பவான்கள் களம் கண்ட வரலாற்று இடம் அது.

பூப்பந்து அரங்கில் இந்தியர்களின் வசந்தகாலத்தை மீட்டெடுக்கும் முயற்சியே இப்போட்டியின் தலையாய நோக்கமாகும். அதிலும், ‘ உலகச் சாதனையாளரைத் தேடும் தருணம்’ என்ற பொருத்தமான கருப்பொருளுடன் போட்டியை மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் பாராட்டுக்குரியது.

மொத்தம் 142 தமிழ்ப் பள்ளிகள் இம்முறை போட்டியில் பங்கேற்றன. இறுதியாட்டத்தில் வெற்றிப் பெற்ற சிலாங்கூர் காஜாங் தமிழ்ப் பள்ளிக்கு ஐயாயிரம் ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்பட்டதோடு, இந்தியா பெங்களூருவில் உள்ள உலகப் புகழ்ப் பெற்ற பிரகாஷ் படுகோன் பூப்பந்து பயிற்சி மையத்தில் 5 நாட்கள் இலவச பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதும் இவ்வாண்டு போட்டியில் முத்தாய்ப்பாய் அமைந்தது. மலேசிய இந்தியப் பூப்பந்து சங்கத்தின் தனா அரிகிருஷ்ணன் முயற்சியில் அக்கனவு நனவாகியுள்ளது.

5 நாட்கள் என்பதை வெறும் குறுகிய காலமாக மட்டும் பார்த்தல் கூடாது; மாறாக அரிய வாய்ப்பாக பார்த்திடல் வேண்டும். அவ்வாய்ப்பை மாணவர்கள் தங்களின் உற்சாகத்தைப் பெருக்கிக் கொள்ளவும், ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் , அடுத்தக் கட்டத்திற்கு தங்களை உயர்த்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். தீவிர விளையாட்டு ஆர்வலன் என்ற முறையில் எனது எதிர்பார்ப்பு அது!

மூன்றாவது நான்காவது இடங்களைப் பிடித்த கெடா, சரஸ்வதி தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும், ஜொகூர் மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் வாழ்த்துகளைக் கூறியே ஆக வேண்டும்.  


றுதியாட்டத்தின் போது பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் 
தமிழ்ப் பள்ளியை வீழ்த்தி காஜாங் தமிழ்ப் பள்ளி கிண்ணத்தை வாகை சூடிய போது , மாணவர்களும் ஆசிரியர்களும் வெற்றிக் களிப்பில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆரவாரம் புரிந்தது அரங்கில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதே காட்சியை, நாளை தேசிய அளவிலோ, ஆசிய அளவிலோ ஏன் உலக அளவிலோ காணும் வாய்ப்பு வந்தால்….எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே தித்திக்கிறதே!   

லேசியப் பூப்பந்து சங்கத் BAM தலைவர் டத்தோ ஸ்ரீ நோர்சா ஜக்காரியா நேரில் வந்து இறுதியாட்டத்தை முழுவதுமாக கண்டு களித்து, பரிசுகளை எடுத்து வழங்கிச் சென்றார். BAM-மின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்திருப்பது இப்போட்டிக்கான அங்கீகாரம்.

ஒரு படி மேலாக, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடினும் தனது வற்றாத ஆதரவை வழங்கி மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்.

ல தமிழ்ப் பள்ளிகளில் பூப்பந்து பயிற்சி என்பதே கிடையாது. ஆயினும், கடந்தாண்டு போட்டிகளின் தாக்கமாக சில பள்ளிகள் இப்போட்டிக்காக தங்களைத் தயார் படுத்தவே சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டு போட்டியில் பங்கேற்றதாக Youth Core தலைவர்  க.சுரேந்திரன் கூறிய போது, கண்டிப்பாக அவர்களின் நோக்கம் சரியான பாதையில் செல்வதைப் பறைசாற்றியது.

னி அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்ப் பள்ளிகளின் பங்கேற்பு மேலும் அதிகரிக்க வேண்டும். மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை ஏற்பாடு செய்வதில் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் துணை நிற்க வேண்டும். வட்டார பொது அமைப்புகளும் கைக் கொடுத்து இது போன்ற உன்னத முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ப்படி ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து தங்களின் அரிய முயற்சிக்கு உரிய அங்கீகாரத்தைப் பெறுவதில் சுரேந்திரனும் அவர்தம் படையினரும் மேற்கொண்டு வரும் மெனக்கெடல் ஒருநாளும் வீண் போகாது!

இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் நமக்கெல்லாம் இன்னொரு பஞ்ச் குணாளன் நிச்சயம் கிடைப்பார். நம்புங்கள்! அந்த நம்பிக்கையை  SMC Youth Core-ரின் #smcsmash விதைத்திருக்கிறது. வாய்ப்பு இல்லையே என இனியும் யாரும் சப்பைக் காரணங்களைக் கூற முடியாது.

ற்கனவே கால்பந்து துறையில் இந்தியர்களை வளர்க்கும் பணியில் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கம் MIFA, ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையில் இந்தியர்களின் வரலாற்றை மீட்டெடுக்க SUKIM போட்டியின் மூலம் மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவை ஆகியவை உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

இந்நிலையில் பூப்பந்துத் துறையிலும் நாம் மீட்சிப் பெறுவதற்குண்டான நடவடிக்கைகளை இந்த SMC கிண்ணம்  முன்னெடுத்துச் செல்வது பாராட்டுக்குரியது மட்டுமல்ல போற்றுதலுக்குரியது. அதையெல்லாம் விட ஆதரவளிக்கப்பட வேண்டியது.

யாருக்குத் தெரியும், நாளை மலேசியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை, பூப்பந்து போட்டியின் வழி நம்மவர் பெற்றுத் தரலாம்!

-மோகனதாஸ் முனியாண்டி
#சிந்தித்தவேளை  தலை வணங்கிய வேளை 



Friday, 6 October 2017

எங்களூர் பாகுபலி!




ர்ப்பரிப்புகள் சற்று அடங்கிய பிறகே அதாவது தாமதமாகத் தான் இம்முறை படத்தைப் பார்த்தேன்,  அதிர்ச்சியில் வேர்த்தேன்!

படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிறைவேறியதா?


நிறைவேறியது மட்டுமல்ல , என் எதிர்பார்ப்பையும் மீறியது என நிச்சயம் உரக்கச் சொல்வேன்...

உள்ளபடியே மர்மக் கதைகள், பேய்ப் படங்கள், திகில்  கதைகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால், எனது அந்த மனப்போக்கை 'என் வீட்டுத் தோட்டத்தில்' மாற்றியிருக்கிறது.


படத்தின் கதை எல்லாருக்கும் தெரியும் !

ரு வரியில் சொல்வதென்றால்..... ஓநாய் மனிதனால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படும் மாற்றுத் திறனாளி பெண்ணொருவருக்கு என்ன ஆனது? யாரந்த ஓனாய் மனிதன்?

அதன் கேள்விக்கான விடையைத் தான் சுமார் 2 மணி நேர விறுவிறு பயணத்தில் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாய் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஷாமளன்.

வழக்கமான காதல், நகைச்சுவை, சண்டை படங்கள் பாணியில் இல்லாமல் ஒரு புது அனுபவத்திற்கு படம் நம்மை தயாராக்குகிறது என்பது ஆரம்பத்திலேயே ஆறுதல் அளித்து விடுகிறது.

ஒரு அரை மணி நேர படத்திற்குப் பிறகு நாற்காலியின் நுனியில் அமர்ந்து பார்க்கும் நிலைக்குச் சென்றேன் என்பது எனக்கே அதிசயமான ஒன்றுதான்.



நடிப்பு

ஏறக்குறைய அனைத்து நடிகர்களுமே இதுவரை இல்லாத அளவுக்கு நடிப்பில் கைத்தேர்ந்தவர்களாக நம் கண்களுக்குத் தெரிகின்றனர்.  


ஜெயா கணேசன்
அனைவரையும் முந்தி நிற்பது கதாநாயாகியாக வந்து எல்லோரின் பாராட்டையும் அள்ளிக் கொள்ளும் ஜெயா கணேசன் தான்.  கேட்கும் - பேசும் திறன் இழந்த பெண்ணாக தத்ரூபமாக வாழ்ந்திருக்கிறார்.  சோகம், பயம், படபடப்பு, அழுகை, மகிழ்ச்சி என அத்தனை அம்சங்களையும் அளவோடு கொடுத்திருக்கிறார். கொலையாளியிடம் படும் துன்பங்களின் போது அவர் வெளிப்படுத்தும் பாவணைகள் அடடா ரகம்.  இவரின் நடிப்புக்கு விருதுகள் வரிசைக் கட்டி நிற்கப் போவது திண்ணம்.



மகேசன் பூபாலன்

துடிப்புமிகு காவல் வீரர் கபிலனாக மனுசன் ஆச்சரியப்படுத்துகிறார்.  பழைய தோல்வியின் தாக்கம், கொலையாளியை தேடி பிடிப்பதில் காட்டும் ஆர்வம், மேலதிகாரியின் உத்தரவை செவ்வனே செய்து முடிக்க காட்டும் தீவிரம் என கலந்தடிக்கிறார். அசப்பில் தமிழ் பட நடிகர் அதுல் குர்கர்னியை ஞாபகப்படுத்துகிறார்.  காணாமல் போன பெண்ணின் காதலனை விசாரிக்கையில் 'How do you feel now?' என்ற வசனத்தின் மூலம் தியேட்டரில் கைத்தட்டல் பெறுகிறார். மகேசனுக்கு இனி அடுத்தடுத்து கனமான- கம்பீரமான பாத்திரங்கள் வரும் என நம்பலாம்.


மோகனராஜ்

'புன்னகை செய்திடும்' இசைக் காணொளியில் இராணூவ வீரராக பார்த்த முகம்.   இதில்மாற்றுத் திறனாளிகளுக்கான  பள்ளியில்  Tutor-ராக வருகிறார்.  காது கேளா-வாய் பேச முடியா இளம் பெண்ணுக்கு நம்பிக்கையைக் கொடுத்து கடைசியில் வில்லனாகிறார்.  வில்லனாக  மாறுவார் என நம்மால்  யூகிக்க முடியாத வண்ணம்
கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். ஒரு அப்பாவியான தோற்றம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. திறமையாளராகத் தெரியும் இவரை இயக்குநர்கள் பயன்படுத்திக் கொண்டால் நலம்.


கே.எஸ். மணியம்

வழக்கமாக பாசமிக்க தந்தையாக வலம் வருபவருக்கு இம்முறை சற்று வித்தியாசமான வேடம். தனது அனுபவத்தின் மூலம் ஏற்ற கதாபாத்திரத்திற்கு கனம் சேர்க்கிறார். ஆனால், தொடக்கக் காட்சிகளின் போது பெண்கள் விஷயத்தில் வேறு மாதிரியானவர் என்ற அறிமுகத்தை என்னவோ என் மனம் ஏற்க மறுக்கிறது. இதுவரை பண்பட்ட கதாபாத்திரங்களில் பார்த்தவரை அப்படி பார்க்கையில் அது இயல்புதானே! இருந்தாலும் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் நடித்தாரே அது தான் மூத்த கலைஞருக்கு அழகு.


ஹரிதாஸ்

நம்ம ஊரு 'சாமி'க்கு ஏற்ற கம்பீரத் தோற்றம் - கதாபாத்திரம். தேவையானதை கணக்காகச் செய்திருக்கிறார். ஆனால், அவரின்  நடிப்பாற்றலுக்கு தீவிர ரசிகன் என்ற முறையில் இன்னும் வலுவான கதாபாத்திரங்கள் அவரை நாடி வரும் என நம்புகிறேன்




திலீப் குமார்

படத்தின் உண்மை கதாநாயகன்! ஓநாய் மனிதனாக அலற வைக்கிறார். அங்க அசைவில் அவ்வளவு நேர்த்தி. கத்தி, கோடரி, இரும்புக் கம்பி என ஆயுதங்கள் சகிதமாக வலம் வந்து, கண்ட மேனிக்கு அடித்து வீழ்த்துகிறார், வெட்டி சாய்க்கிறார். ஆனாலும் இந்த 'ஓநாய் மனிதனை' ஏனோ வெறுக்க தோன்றவில்லை. கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப உடலமைப்பை ஏற்றியிருக்கிறார் என தெரிகிறது. ஓநாய் மனிதனின் பின்னால் நமக்கொரு புதியத் திறமையாளர் கிடைத்திருக்கிறார்.



இசை மற்றும் பின்னணி இசை


ஷமேஷன் மணிமாறன் பின்னியெடுத்திருக்கிறார் ! தொடக்கத்தில் இருந்து கடைசி வரை கதையை விறுவிறுப்புக் குறையாமல்  நகர்த்திச் செல்கிறது அவரின் பின்னணி இசை. ஒரு தமிழ்ப் படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை என்ற அளவுக்கு மிக நேரத்தியாக அமைந்திருக்கிறது. திகிலூட்டுவதிலும், பரபரப்பை கூட்டுவதிலும் பல்லாங்குழி ஆடியிருக்கிறார். நம்மிடையே மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரம் உருவாகியிருக்கிறது.



பாடல்

ஒளி விழா பாடல் மனதில் நிற்கிறது.  ஷமேஷனின் இசையில் யுவாஜியின் வரிகளுக்கு பிரசன்னாவின் குரல் வலு சேர்க்கிறது. காட்சியமைப்பும் அருமை.



ஒளிப்பதிவு 

ஒளிப்பதிவாளரின் மெனக்கெடல் படத்தை தூக்கி நிறுத்த பெரிதும் உதவியிருக்கிறது.  தொடக்கக் காட்சிகளுக்கு ஏற்றவாறும், அடுத்தடுத்து வரும் அதிரடி காட்சிகளுக்கு உகந்தவாறும்
இயக்குநரின் கற்பனைக்கு ஈடாக ஒளிப்பதிவாளரின் கேமரா வேலை செய்திருக்கிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில காட்சிகள் வியக்க வைக்கின்றன. இதை அகன்ற திரையில் பார்த்தால் தான் அதன் அருமை புரியும்.


மொத்த படத்தில் 30 விழுக்காடு வசனங்களே இருப்பது படித்து தான் தெரிந்து கொண்டேன். படம் பார்த்த போது அந்த உணர்வே இல்லை. அந்த அளவுக்கு கதையோடு நாம் ஒன்றி போய் விடுகிறோம்.


ரு சில இடங்களில் குறிப்பாக முதல் அரை மணி நேர காட்சிகளில் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.  பரவாயில்லை, கதை செல்லும் வேகத்திலும் விறுவிறுப்பிலும் அது அவ்வளவு பெரிதாக தெரியவில்லை. ஏன் தமிழ்ப் படங்களில் நாம் பார்க்காததா....


ங்காங்கே சில குறைகள் இருந்தாலும், மிகச் சிறந்த மலேசிய
படைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.



இயக்கம்.....

கார்த்திக் ஷாமளன்

கார்த்திக் ஷாமளன்....  #சிந்தித்தவேளை உங்களைத் தலை வணங்குகிறது!


மலேசியத் தமிழ் திரைப்பட துறையின் எதிர்காலம் உங்களைப் போன்ற இளைஞர்களின் கையில் தவழுவது காலத்தின் கட்டாயம். எந்த சமரசமும் இன்றி இது போன்ற மிகச் சிறந்த படைப்புகளைத் தரும் முயற்சியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.


மீதியை நேரில் பாராட்டுகிறேன்!

அதுவரை 'என் வீட்டுத் தோட்டத்தில்' மொத்த படக் குழுவுக்கே எனது பெரிய salute!


" அசலூர் பாகுபலியையும் பத்து முறை பார்ப்போம், 
உள்ளூர் பலசாலிகளையும் முத்து போல காப்போம்! "


- மோகனதாஸ் முனியாண்டி 
#சிந்தித்தவேளை 




Monday, 17 July 2017

வரலாறு திரும்பும்; வசந்தம் அரும்பும்!





2017 மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகள் ( SUKIM 2017 ) பேராக், தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக் கழக விளையாட்டு வளாகத்தில் இனிதே நடைபெற்று முடிந்திருக்கின்றது.

நான்காம் முறையாக அவ்விளையாட்டுத் திருவிழா அரங்கேறியிருக்கிறது.

சிறப்பாக ஏற்று நடத்திய மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார அறவாரியத்திற்கும்,  உபசரணை மாநிலமான பேராக்கிற்கும் முதலில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்க வேண்டும்….




போட்டியைப் பற்றி என்ன சொல்வது?

“ எங்க காலத்தில் இப்படியெல்லாம் இல்லையே” என அங்கலாய்த்துக் கொள்வதைத் தவிர ?

ஆம்,  இருந்திருந்தால் நாங்கள் எல்லாம்…….  என ஏக்க பெருமூச்சு விடும் நிலைக்கு எங்களைத் தள்ளியிருப்பதே இப்போட்டியின் வெற்றி!

இம்முறை ஈராயிரம் விளையாட்டாளர்கள் பங்கெடுக்க உப்சியே கலகலத்து போனது.

திரெங்கானு, கிளந்தான் மாநில போட்டியாளர்களும் பங்கேற்று மேலும்  உற்சாகமூட்டினர்.





பள்ளிகள், பொது அமைப்புகள், விளையாட்டுச் சங்கங்கள் என அனைவரும் திரளாகப் பங்கேற்றது,  தொடக்க விழாவின் போதே  ஏதோ நம்பிக்கையை விதைத்தது என்றே சொல்லலாம்.



வழக்கமான திடல் தடப் போட்டிகள், கால்பந்து, கராத்தே, தேக்குவாண்டோ, கபடி, சிலம்பம் போட்டிகளைத் தவிர்த்து  டென்னிஸ், ஸ்குவாஷ், உடல் கட்டழகர் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது பாராட்டுக்குரியது.




ஒவ்வொரு களத்திலும்
விறுவிறுப்புக் குறையாத போராட்டங்கள்,
மூலையெங்கும் வெற்றி முழக்கங்கள்,  
பரபரப்புமிக்க பதக்க வேட்டை!

பதக்கங்களை வாரிக் குவித்து ஒட்டுமொத்த வெற்றியாளராக சிலாங்கூரும் வாகை சூடி விட்டது!


இதோடு  முடிந்ததா?

ல்லை…. இனிமேல் தான் பயணமே!


மற்ற இனத்தவர் ஆதிக்கம் செலுத்தி வரும் போவ்லிங், நீச்சல், முக்குளிப்பு, ஜிம்னாஸ்திக் போன்ற விளையாட்டுகளிலும்  வரும் காலங்களில் கவனம் செலுத்தினால் சிறப்பு.

உரிய தளமும் களமும் கிடைத்தால்  நம்பிக்கை நட்சத்திரங்கள் நிச்சயம் அடையாளம் காணப்படுவர்!

அடுத்தடுத்து வரும் போட்டிகளில், சுக்மா சாதனைகளும் உடைக்கப் பட வேண்டும்.

முடிந்தால் தேசிய சாதனைகளையும் முறியடிக்க வேண்டும்.

அப்படி நடந்தால் SUKIM-மின் தரம் தானாக உயரும்.

நம்மினத்தவர் மட்டுமின்றி நாட்டு மக்களின் கவனத்தையே ஈர்த்து,  விளையாட்டு நாள்காட்டியில் யாரும் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக உருவாகிவிடும்.


ஈராண்டுகளுக்கு ஒரு முறை சீ விளையாட்டுப் போட்டிக்கும்,
நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிக்கும்,
உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிச் சுற்றுக்கு காத்திருப்பது போல….


இனி இந்த SUKIM விளையாட்டுப் போட்டிக்காக  நமது நம்பிக்கை நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சமுதாயமே காத்திருந்து கொண்டாட வேண்டும்!


SUKIM,  SUKMA வரை மேம்பட்டு தேசிய அளவு உயர வேண்டும்!

சீ போட்டிக்கும் ஆசியப் போட்டிக்கும் ஏன் என்றாவது ஒருநாள் ஒலிம்பிக்/ உலகப் போட்டிகளிலும் பங்கேற்கும் அளவுக்கு  இவர்கள் உயர வேண்டும்.


மின்னல் வேக ஓட்டக்காரர் டான் ஸ்ரீ டாக்டர் எம் ஜெகதீசன், டத்தோ எம். இராஜாமணி, பூப்பந்து சகாப்தம் மறைந்த டத்தோ பஞ்ச் குணாளன்,  கால்பந்து ஜாம்பவான் டத்தோ எம்.கருத்து,  போவ்லிங் ஜாம்பவான் டத்தோ பி.எஸ்.நாதன், பறக்கும் பாவை ஜி.சாந்தி, நெடுந்தூர ஜாம்பவான் எம்.ராமச்சந்திரன், சைக்கிளோட்ட சிங்கம் எம். குமரேசன் , கோல் காவலர் வீ.ஆறுமுகம், இன்னும் எத்தனையோ நம்மின தங்கங்கள் வலம் வந்த விளையாட்டரங்கை அடுத்தத் தலைமுறையும் வலம் வர வேண்டும்!

நாம் இல்லாத விளையாட்டோ, களமோ இல்லையென்ற நிலை உருவாக வேண்டும்!

விளையாட்டரங்கை ஆக்கிரமித்த  நமது வரலாறு திரும்ப வேண்டும்; திரும்பும்!

நம்புங்கள் …..

அந்த நம்பிக்கையை இந்த SUKIM விளையாட்டுப் போட்டி விதைத்திருக்கிறது.

அதை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை.

ஏற்பாட்டுக் குழுவினரை #சிந்தித்தவேளை தலை வணங்குகிறது!

- மோகனதாஸ் முனியாண்டி




Saturday, 27 May 2017

சறுக்கியது ஏனோ சிவகாமி?


டத்தைப் பார்த்தேன் பிரமாண்டத்தை ரசித்தேன் !
எல்லாரும் புகழ்ந்து விட்டார்கள், நான் புகழ இனி என்ன இருக்கிறது,
18 தடவை பார்த்து விட்டேன் என்பதை விட!


நேரடியாகத் தலைப்புக்கு வருவோம்…..

சறுக்கியது ஏனோ சிவகாமி?


முதல் பாகத்தில் கதாநாயகர்களையே பின்னுக்குத் தள்ளி வான் என உயர்ந்து நின்ற சிவகாமி, இந்த இரண்டாம் பாகத்தில் அப்படியே தலைக் குப்புற விழுந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.


ந்தியத் திரையுலக வரலாற்றில் அப்படி ஒரு வலிமையான பெண் கதாபாத்திரத்தை அதுவரை யாரும் கண்டதில்லை என அனைவராலும் புகழப்பட்டவர் சிவகாமி.

னது ஆளுமையால்  மகிழ்மதி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆண்ட ராஜமாதா , கணவனின் சதி வலைகளைப் பிய்த்தெறிந்த  பெண், புத்திக்கூர்மை,  ராஜதந்திரம், அடுத்த அரசனை அறிவிப்பதில் நீதி தவறாமை, போர் தந்திரம் என  பெண்களையே பெருமைப் படுத்தும் அளவுக்கு அமைந்திருந்தது அன்றைய சிவகாமி கதாபாத்திரம்.

ஆனால், இரண்டாம் பாகத்திலோ லாரி குடை சாய்ந்தது போல், ஏறக்குறைய முழுவதுமாக சரிந்து விட்டார் ராஜமாதா. பின்னே, பாத்திரப் படைப்பு அப்படி!

ரண்டாம் பாகத்தின் தொடக்க காட்சியில் அதே பழைய கெத்துடன் அறிமுகமானவர், பாகுபலியை திக்விஜயம் மேற்கொள்ள பணிக்கும்  காட்சியில் சொல்லும் விளக்கங்கள் மூலம் தனக்குண்டான மரியாதையை மேலும் கூட்டிக் கொள்கிறார்.

னால், எப்போது தன் வயிற்று மகன்  பல்வாள்தேவன்  மணமுடிக்க விரும்பும் குந்தலதேச இளவரசி தேவசேனாவுக்கு பொன்னையும் பொருளையும் அனுப்பி வைத்து பெண் கேட்க கட்டளையிடுகிறாரோ, அப்போதே தொடங்கி விட்டது அவரின் சரிவு….

லகமே வியக்கும் சிவகாமி தானும் சாதாரண பெண் தான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விடும் தருணம் அது. அதுவும் தனக்கு மருமகள் வயதில் உள்ள பெண்ணிடம் பதில் மடல் வாயிலாக அவமானப்பட்டு வாங்கிக் கொள்ளும் கட்டம் இன்னும் மோசம். கோபத்தின் உச்சியில், குந்தலதேசத்தின் மீது போர் தொடுக்கக் கட்டளையிடுவதும், தேவசேனையைக் கைது செய்து வர பாகுபலிக்கு தூது அனுப்புவதும் என அடுத்தடுத்து தடுமாறி விழுகிறார்.

தேவசேனையை பாகுபலி மகிழ்மதி அரசவைக்கு அழைத்து வரும் காட்சியில், ‘ இந்த சிவகாமியின் மருமகளுக்கு கொஞ்சம் அகந்தையும் அழகுதான்’ என கெத்தாகக் கூறி  டென்ஷனைக் குறைத்த அடுத்த நொடியில் மீண்டும் சறுக்கல்.

தேவசேனை குரலை உயர்த்தியதும் அவர் பேசும் வசனம் –  மாமியார் ரகம்!

பல்வாள்தேவனுக்கு வாக்குக் கொடுத்து விட்ட ஒரே காரணத்திற்காக பாகுபலியின் முடிவை மாற்றச் சொல்வதும், பாகுபலியே தன்னை எதிர்த்து பேசுவதை ஏற்க முடியாமல் சீறிப் பாய்வதும், தேவசேனையை ‘வஞ்சகி’ எனக் குறிப்பிடுவதும்,  தடாரென்று, ஏற்கனவே அறிவித்த முடிவை மாற்றி பல்வாள்தேவனை புதிய அரசனாக அறிவிப்பதிலும் வில்லத்தனம் தெரிந்ததே தவிர, நாம் முன்பு பார்ந்து வியந்த புத்திக் கூர்மையைக் காணவில்லை.

ட்டாபிஷேகத்தின் போது பாகுபலிக்கு பாராமுகம் காட்டி ஒரு ‘வெட்டு வெட்டுவாரே’ அது கூட பரவாயில்லை. சீமந்த நிகழ்வில் தேவசேனையின் மீது பூ தூவி ஆசி வழங்கும் காட்சியில் லோக்கல் மாமியாராகவே மாறி விடுகிறார்.

துணிச்சல், வீரம், ஈகோ என்ற பெயரில் சிவகாமியும் தேவசேனையும் மோதிக் கொள்வது நாம் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன மாமியார் மருமகள் சண்டை தான்.

ராஜமாதா சொல்லித் தான் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்பதை மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சியே, சிவகாமி அடுத்தடுத்து சரிவதைப் போல் காட்டப்பட்டதற்கான காரணமோ என யோசிக்க வைக்கிறது.

முதல் பாகத்தில் கையில் குழந்தையை வைத்துக் கொண்டே துரோகம் செய்த சேனாபதியை வதம் செய்வதும், கணவர் நாசர் தனது மகனுக்கே அரியாசனம் கிடைக்க வேண்டுமென தூபம் போடும் போது, 

“ என் இரு மகன்களுக்கும் இந்த அரியாசனத்தில் அமர சம உரிமை உண்டு. அவர்கள் வளர்ந்த  பின் வீரத்தில் சிறந்தவன் எவனோ, மக்களின்  மனதை வெல்பவன் எவனோ, அவனே மகிழ்மதியின் அரசன். அதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்” 


என கம்பீரம் காட்டி கைத்தட்டல் பெற்ற சிவகாமி, பிள்ளைகள் பெரிதானதும் எப்படி பிங்கலத் தேவரின் தூபங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிபணிந்தார்...?


பாசம் கண்களை மறைத்து விட்டது என்று சொல்வதற்கில்லை. காரணம் யாருமே கண்டிராத துணிச்சலும், அறிவுக் கூர்மையும் கொண்டவராக சித்தரிக்கப்பட்டவர் சிவகாமி. கணவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பாகுபலியைப் பிடிக்காது என தெரிந்திருந்தும், தன் காதுகளுக்கு ‘விஷங்கள்’ எட்டும் ஒவ்வொரு சமயமும் சரியாக விசாரிக்காமல் முடிவெடுத்தது ஏன்? சிவகாமி அப்படி முடிவெடுக்கக் கூடியவர் அல்ல.


அரசனையே கொல்லத் துணிந்தான் என கண்ணில் கண்டதை வைத்தும், கணவன் சொன்னதை கேட்டுமே வைத்து  பாகுபலிக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு பலவீனமானவரா?



தேவசேனையை துணிச்சல் மிக்கவராகக் காட்டத்தான் சிவகாமி டம்மி ஆக்கப்பட்டாரோ? ஆக, தொடக்கம் முதல் தேவசேனாவின் பிடி இறுகுவதும், சிவகாமி அடுத்தடுத்து சரிவதுமாக காட்சிகள் நகர்ந்திருக்கின்றன.

ன் தவற்றை உணர்ந்து தேவசேனாவின் காலில் விழுந்து மனமுருகும் போது ஏறக்குறைய எல்லாம் முடிந்து விட்டது.


பார் புகழ் மகிழ்மதி சாம்ராஜ்யத்தின்  அசைக்க முடியாத ராஜமாதா சிவகாமி, சாதாரண மாமியாராக மாறி மன்னிப்புக் கேட்கிறார்.


டைசியில் குட்டி பாகுபலியைத் தலைக்கு மேல் தூக்கி புதிய அரசன் என அறிவிக்கும் போது, கொஞ்சம் நிமிருகிறார் சிவகாமி. மொத்தமாக சாய்ந்து விட்ட தனது இமேஜை பிடித்து நிறுத்த ராஜமாதாவுக்குக் கிடைத்த வாய்ப்பு அது.



பாகுபலியைக் குத்திக் கொன்ற கட்டப்பா  மனதில் நின்று விட்டார்.
ஆரம்பத்தில் இருந்தே அரியாசனத்திற்கு ஆசைப்பட்டனாகக் காட்டப்பட்ட பல்வாள்தேவனும், கொம்பு சீவி விடுவதையே வாடிக்கையாக் கொண்ட தந்தை பிங்கலதேவரும்  கூட ஸ்கோர் செய்து விட்டனர்.
மதன் கார்க்கியின் வசனத்தால் தேவசேனாவும் தனித்து தெரிந்து விட்டார்.

னால், மாபெரும் சரிவைச் சந்தித்து சிவகாமி சுக்கு நூறாகி விட்டார். 
ராஜமாதாவாகே  வாழ்ந்துக் காட்டிய ரம்யா கிருஷ்ணனால் சிவகாமி பாத்திரத்தின் தலைத் தப்பியிருக்கிறது. மகாரணிக்குண்டான அனைத்து மிடுக்கு, கம்பீரம், துணிச்சல், அறிவுக்கூர்மை, என உடல் மொழியிலேயே குறிப்பாக கண்களாலேயே நேர்த்தியாகக் காட்டி விட்டார் ‘நீலாம்பரி’.

வேறு யாராவது நடித்திருந்தால் நிச்சயம் சிவகாமி ‘அடிபட்டிருக்கும்’

பாகுபலி 2-டில் நடிப்பில் எல்லாரையும் ரம்யா கிருஷ்ணன் தூக்கிச் சாப்பிட்டு விட்டாலும், பாத்திரம் என வரும் போது படு பாதாளத்தில் விழுந்தது என்னவோ சிவகாமி தான் !

முற்பாதியில் ஓவர் கெத்தாக வந்த போதே நமக்குத் தெரிந்திருக்க வேண்டும், சிவகாமியின் முடிவு என்னவாக இருந்திருக்குமென்று ! 

எது எப்படி இருந்தாலும் மகிழ்மதி பேரரசின் அதி சக்தி வாய்ந்த ராஜமாதாவாக காலத்துக்கும் சிவகாமி நிலைத்திருப்பார்! 


ஜெய் மகிழ்மதி !


- மோகனதாஸ் முனியாண்டி
#சிந்தித்தவேளை 

Wednesday, 26 April 2017

வதனி சீக்கிரமே வெள்ளித் திரைக்கு ‘வர நீ’ !





நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் நான் பார்த்த குறும்படம்!

கதை என்ன?...

எதிரெதிர் குணாதிசயங்கள் கொண்ட இருவர் எதிர்மறையான சூழ்நிலையில் சந்தித்துக் கொள்கின்றனர். ஒருவன் பணக்காரத் தோற்றத்தில் இருக்கும் ‘முரட்டுக்காளை’. இன்னொருவன் பக்கத்து வீட்டு பையன் சாயலில் பயம் கலந்த ‘பாலகன்’. அடுத்தச் சந்திப்பும் மோதலில் முடிய, இரண்டாமவன் பழித் தீர்க்கத் துடிக்கிறான். அவனுக்கான வாய்ப்பு வந்து வாய்க்கிறது. உள்ளே போனால், பணக்காரனின் பின்னால் ஏதோ மர்மம்! அடுத்து என்ன நடந்தது என்பது தான் அந்த 17 நிமிட குறும்படத்தை பரபரப்பாக கொண்டுச் செல்லும் அம்சம்….

ஒரே வரியில் சொல்வதென்றால் ஒரு பழிவாங்கலை தற்காலத் தொழில்நுட்பத்துடன் பின்ணி சுவைக் குன்றாமல் தந்திருக்கிறார் இயக்குநர் வதனி.


அடுத்து கதாபாத்திரங்களைப் பார்ப்போம்


ஸ்ரீ குமரன் முனுசாமி

SRI KUMARAN MUNUSAMY

புது வரவான ஸ்ரீ குமரன் இதில் SK என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். வானொலி பிரபலமாக வலம் வந்தவரின் கலையுலக பிரவேசத்திற்கு முக்கிய முகவரி குறுஞ்செயலி. வயதுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவராய் ‘குழந்தை நட்சத்திரமாகவே' தெரியும் SK தேவையான இடத்தில் பயம், படபடப்பு, பழிவாங்கத் துடிக்கும் நேரத்தில் குரோதம் என மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.  இவருக்கான வசனங்களில் கூடுதல் ‘நச்’ இருந்திருந்தால் சிறப்பு.


 
நிவாஷன் கணேசன்

NEEVASHAN GANESON

ஹனுமானாக அதிரடித்தவரை வில்லனாகப் பார்க்கையில் வியந்து தான் போனேன். நிவாஷனின் வளர்ச்சியில் மற்றொரு பரிமாணம். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் மனிதர். பொருத்தமான முக பாவணை, வசன உச்சரிப்பு, உடல் மொழி நிவாஷனுக்குள் ஒளிந்திருக்கும் மிகச் சிறந்த நடிகனை நமக்கு வெளிக்காட்டியிருக்கிறது. நிவாஷன் வெகு சீக்கிரத்தில் உச்சத்தைத் தொடுவார் போலிருக்கிறது.  


கதிர் கிராங்கி

KATIR CRANKY

காதல் கொண்டேன் தனுஷை ஞாபகப் படுத்தினாலும், இரசிக்க வைக்கிறார். அமைதியின் உருவமானவர் மௌனம் கலையும் இடம் அருமை. அதிக வசனங்கள் இவருக்குத் தேவைப்படவில்லை. கண்களே பாதி வேலையை முடித்து விடுகின்றன. “ நம்ப பசங்க login பண்ணா, log out பண்ண மாட்டாங்க” வசனம் யதார்த்தம். கடைசிக் காட்சியில் மிமிக்ரி சபாஸ் ரகம்.


ரிக்கு

RIKNAVEEN MANIARASU

மனதில் இடம் பிடித்த முக்கிய கதாபாத்திரம். சிம்பு குரலில் வசனம் பேசுவதிலும், அதற்கேற்ப உடல் மொழியில் வித்தியாசம் காட்டுவதிலும் அவ்வளவு இயல்பு. நடிகர் பிரேம்ஜியின் சாயல் தெரிந்தாலும் ஈர்க்கிறார். இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இயக்குநர்களுக்கு நலம். 



குமரேஷ்  
KUMARESH ELANGOK

ஓரிரு காட்சிகளில் வந்து போனாலும் நகைச்சுவைக் கலந்த குரலில் திருப்திப்படுத்தியிருக்கிறார்.



ஜாலி

ZALLEE

பின்னணி இசையா, ஒளிப்பதிவா, படத்தொகுப்பா ? ஜாலி உங்களுக்கு தெரியாத துறை எதுவும் உண்டா? என கேட்கத் தோன்றுகிறது. இயக்குநரின் கதைக்கும் கற்பனைக்கும் உயிர் கொடுத்திருக்கிறது இவரின் கைவண்ணம். தொடக்கக் காட்சியிலேயே ஒளிப்பதிவில் பிரமாண்டத்தை காட்டி விடுகிறார். Jolly-யாகக் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நமது அடுத்த வாரிசாக இவரை தாராளமாக கோலிவூட்டுக்கு அனுப்பி வைக்கலாம்….பெருமையுடன் !



குறைகளே இல்லையா? ண்டிப்பாக இருக்கின்றன. 

* மனதில் நிற்கும் அளவுக்கு பெண் கதாபாத்திரங்களுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. வந்து போகிறார்கள் அவ்வளவு தான்!

* வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம், சில இடங்களில் வடி கட்டியிருக்கலாம், 

* இன்னும் பரபரப்பை கூட்டியிருக்கலாம்….   

ஆனால், இருக்கும் நிறைகளை பெருமையாகக் கொள்வோம்.

வதனியை வாழ்த்தி வரவேற்போம்!

வதனி



தனி சீக்கிரமே வெள்ளித் திரைக்கு ‘வர நீ’ !



 **************  **************   **************   *************   **************   **********

“ உன்னை அழிக்க ஒரு குறுஞ்செயலி, அதை பதிவிறக்கம் செய்கிறேன்….” பாடல் தியேட்டரை விட்டு வெளியேறிய பிறகும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது….. 

களம் மாறினாலும் நண்பர் ஃபீனிக்ஸ்தாசனின் ஆழம் மட்டும் குறையாது.  
மணி வில்லன்ஸும் தான்! 

குறுஞ்செயலி பாடல் இப்போது எனது கைப்பேசி Ringtone!



- மோகனதாஸ் முனியாண்டி
( M.N.Morgan )

 #சிந்தித்தவேளை