அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Sunday, 31 May 2020

"என்னமோ இருக்குடா உங்கிட்ட! "

"ன்னமோ ருக்குடாங்கிட்ட! "


ண்மைய காலமாக உள்ளூரில் என் கவனத்தை அதிகம் ஈர்த்த பையன்.  'திருடாதே பாப்பா திருடாதே' படத்தில் பார்த்ததுமே பிடித்து விட்டது. வழக்கமாக ஒரு கதாபாத்திரத்தையோ படத்தையோ எனக்குப் பிடிக்க என்னை நானே convince செய்ய வெகுநாட்கள் ஆகும். அப்படிப்பட்ட எனக்கே அது புதிது தான்.


வெண்பா-வைப் அப்போது நான் பார்த்திருக்கவில்லை. நண்பர்கள் சொல்லக் கேட்டிருந்தேன், அவ்வளவு தான். பார்த்திருந்தால் ஒருவேளை திருடாதே பாப்பா திருடாதே பார்க்கும் போது ஒரு சார்பு நிலை எனக்கு ஏற்பட்டிருக்குமோ என்னவோ! படம் சீரியசா போய்க்கிட்டு இருக்கும் போதே இடை இடையில் சரியான காமெடி டைமிங்கில் சிரிக்க வைத்து விடுகிறான். நான் சிரித்தேன் என்பதை விட தியேட்டரே சிரித்தது. கிருஷ்ணா வரும் போதெல்லாம் அடுத்து நிச்சயம் சிரிக்க வைப்பான் என்ற எதிர்பார்ப்பு அரங்கில் அமர்ந்திருந்தவர்களிடையே இருந்ததை பக்கத்திலும் பின்னாடி  இருந்தவர்களின் முனுமுனுப்பிலேயே காண முடிந்தது. திருடாதே பாப்பா திருடாதே படத்தை 6 முறை தியேட்டரில் பார்த்ததற்கு 'கிருஷ்ணா'வும் முக்கியக் காரணம். என்னடா 6 முறையா என ஆச்சரியப்படுகிறீர்களா? அசலூர்  பாகுபலியை மட்டும் டஜன் கணக்கில் பார்க்க மாட்டான் வியன். தரமிருந்தால் உள்ளூர் பாகுபலிகளையும் விடாமல் பார்த்து வைப்பான்.

சில வாரங்களுக்கு முன்னர் தான் 'வெண்பா' -வை தொலைக்காட்சியில் பார்த்தேன். தொடக்கம் முதலே 'தென்னவன்' மன்னவன் ஆகி விட்டான். தென்னவனாக வந்தவனின் முக பாவணை, உடல் மொழி, வசன உச்சரிப்பு அத்தனையும் அத்தனை இயல்பு. அடடா, வெளுத்துக் கட்டுகிறானே பையன் என என்னைச் சொல்ல வைத்தான் யுவராஜன்.

ப்படியும் அவனிடம் ஒரு பேட்டி எடுத்து விட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை அண்மையில் தான் நிறைவேறியது. அதன் தொகுப்பு இதோ !


டிக்க வராமல் இருந்திருந்தால்...

கண்டிப்பாக Footballer ஆயிருப்பேன். அதான் ஆரம்ப லட்சியமா இருந்துச்சு. கண்டிப்பா  Sports சம்பந்தப்பட்ட ஒரு துறையில இருந்திருப்பேன். அது நடக்காம போக, நடிக்க வந்தேன். இல்லாட்டி பிசினஸ்ல இருந்திருப்பேன். அதுல கொஞ்சம் ஈடுபாடு காட்டிருப்பேன். அப்பாவோட பிஸ்னஸ் செஞ்சிருப்பேன். இல்லனா ஏதாவது சொந்தத் தொழில் செஞ்சிருப்பேன். ஏனா நான் படிச்சது பிசினஸ்தான். 



திரை வாழ்க்கையில் திருப்பம் ? 

வெண்பா குறும்படம் தான் turning point.  அதுக்கு முன்னாடி கலைத்துறை சார்ந்த  நிறைய விஷயங்கள் பண்ணிட்டு வந்தேன். music video கூட செஞ்சிட்டுருந்தேன்.  வெண்பாக்கு எனக்கு கிடைச்ச வாய்ப்பு எப்டினா.... நான் மிமிக்ரிலாம் பண்ணிட்டு இருந்தேன்.


அப்போ ஒரு மூவி ஆடிஷன். கோலிவூட் படம், மலேசியாவுல 70% படப்பிடிப்பு 30% இந்தியாவுல.  Audition-கு போயிருந்தேன். என்னை ஒரு முக்கியமான ரோலுக்கு select பண்ணிருந்தாங்க. அது பரவலா பேசப்பட்டது. அது ஒரு காரணம் எனக்கு வெண்பா கிடைக்க! Career -ல வெண்பா தான் பெரிய turning point. அதுக்குப் பிறகு தான் பெரிய பெரிய பட வாய்ப்புகள் தான் வந்துச்சு. 

வெண்பாவின் தாக்கம்?

வெண்பா வந்து மக்கள் மத்தியில சிறப்பான இடத்தைப் பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் மலேசியாவுல வந்த படங்கள்லயே  probably the most loved and celebrated film -னு நான் தைரியமா சொல்லுவேன். ஒரு படத்தை பார்த்தா நல்லா இருக்குனு சொல்றதோட விடாம, எனக்கு இது தான் பிடிச்சிருக்குனு அதிக பேரு Social Media-ல போட்டது இந்த படத்துக்கு தானு நெனக்கிறேன்.  இதான் என்னை பொருத்த வரைக்கும் Best Malaysian Film-நு நிறைய பேரு சொல்லிருக்காங்க.  இப்படி பட்ட history making படத்துல நானும் ஒரு பகுதியாக இருந்தத நினைச்சா எனக்கு சந்தோஷமா பெருமையா இருக்கு.  கடைசி வரைக்கும் எல்லாரும் தென்னவன் கேரக்டர ஞாபகம் வச்சிருக்காங்க. வெண்பா முலம் தான் அது சாத்தியம் ஆச்சு.வெண்பா எனக்கும் ரொம்ப ரொம்ப Special.                                                                                                                                                  
ம்மா

கலைத்துறைல எனக்கு ஆர்வம் இருக்குன்றத சின்ன வயசில இருந்தே எங்க அம்மாக்கு தெரியும். டான்ஸ், மிமிக்ரி எதுவா இருந்தாலும் ரொம்ப encourage பண்ணுவாங்க. உன் மகன் நல்லா பண்றானு எல்லாரும் சொல்லும் போது அந்த ஒரு பெருமை  தெரியும்.

எங்கம்மா முகத்த பார்ப்பேன். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே அதை நான் பார்த்திருக்கேன்.  ஒரு stage performance-சா கூட இருக்கட்டும், அம்மா முகத்துல அந்த சந்தோஷத்த பார்க்கலாம்.

குறிப்பா, என்ன first time teatre -ல பார்க்கும் போது அவுங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்பா பார்க்கும் போது அவுங்க கொஞ்சம் கண் கலங்குற மாதிரி இருந்துச்சு. ரொம்ப நல்லா பண்ணிருக்கனு சொன்னாங்க. 


வெள்ளித் திரையில் முகத்தைப் பார்த்த அந்த தருணம்!


திருடாதே பாப்பா திருடாதே பார்த்தேன். ஆனா அதுக்கு முன்னாடி Big Screen-ல வந்துருச்சு என்னனா, வெண்பா குறும்படம். teatre-ல பிரிமியர் பண்ணாங்க. அதாவது  You Tube-ல ஏத்துறதுக்கு முன்னாடியே தியேட்டர்ல industry-ல உள்ள friends எல்லாம் கூப்பிட்டு One Day Screening மாதிரி வெச்சாங்க. அந்த டைம்ல நான் ஆஸ்திரேலியாவுல இருந்தேன். நான் என்னை முதல் முறை screen-ல பார்க்கலாம்னு நெனச்சது முடியல. ஆனா first time நான் என்னைப்

பார்த்தது என் நண்பனோட மொபைல் phone-ல தான்.  

அந்த படம் ஓடிட்டு இருக்கும் போது கரெக்டா வீடியோ call பண்ணி Screen-ல தெரியுற மாதிரி வெச்சிருந்தான்.  நான் ஆஸ்திரேலியாவுல இருந்துக்கிட்டே screen-ல என்னை நான்  பார்த்தேன். நான் ஒரு விஷயம் செஞ்சா, அதுக்கு எல்லாரும் கைத்தட்டுனாங்க, அதை பார்க்க சந்தோஷமா இருந்துச்சு. கடல் கடந்து வேற ஒரு கண்டத்துல இருந்து என்னை நான் பார்த்தேன். அது ஒரு நல்ல experience.

                                                                                                                                                         
திருடாதே பாப்பா திருடாதே அனுபவம் ?


நான் நடிச்ச மொத படம் ரிலீசாக போகுது, முக்கியமான கேரக்டர் பண்ற ஒரு படம் அது. எனக்கு ரொம்ப freedom கொடுத்தாங்க. சீரியசா போய்கிட்டு இருக்கிற ஒரு கதைல எல்லாருமே ஒரு light moment  எதிர்பார்ப்பாங்க...எங்க கொஞ்சம் காமெடி வரும்? எங்க சிரிப்பு வரும்? எவன் நம்மள entertain பண்ணுவானு? அதுக்காக செதுக்கப்பட்ட  ஒரு கேரக்டர் தான் கிருஷ்ணா. So எனக்கு அதுல பயங்கர freedom கொடுத்தாங்க.  Basic-காவே உனக்குள்ள ஒரு  humour sense இருக்கு, அந்த humour-ர உன்னால carry பண்ண முடியும்னு. அப்டினு சொல்லிட்டு ஷாலினி  - சத்தீஷ் எனக்கு சுதந்திரம் கொடுத்தாங்க. எந்த scene-னா இருந்தாலும் அதை இப்படி பண்ணலாமா?  இப்படி ஒரு betterment  பண்ணலாம்னு நான் கேட்டா, நல்லா இருக்கும் போது இத நீங்க பண்ணுங்கனு ஊக்கம் கொடுப்பாங்க. நிறைய விஷயம் learn பண்ணிக்கிட்டேன். Punctuality-னா என்னனு அவுங்க கிட்ட கத்துக்கிட்டேன். கரெக்டான டைம்ல வொர்க் பண்ணூவாங்க. 




திருடாதே பாப்பா திருடாதே படம் பார்த்து நான் எழுதியிருந்த  விமர்சனத்தின் சிறு பகுதி  



கிடைத்த மிகச் சிறந்த பாராட்டு!

இதுவரைக்கும் எனக்கு கிடைச்ச மிகச் சிறந்த பாராட்டுனா...Industry-ல  இருக்கிறங்களே நிறைய பேரு சொல்லிருக்காங்க. ஒவ்வொரு படம் வரும் போதும், நீ ஒரு natural-லான நடிகனு சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. குறிப்பா எல்லாருக்கிட்ட இருக்கிற ஒரு தப்பான கண்ணோட்டம் என்னனா...மலேசியாவுல இருக்குற நடிகர்கள் கொஞ்சம் dramatic-காவே நடிப்பாங்கனு! நீ casual-லா natural-லா நடிக்குற, எனக்கு உன் நடிப்பு பிடிச்சிருக்கு. ஒரு பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்குனு சொல்லுவாங்க. இதுவரைக்கும் படம் பார்க்கும் போது இவன் effortless-சா பண்ணுறான் அப்டினு  பெரும்பாலும் எல்லாரும் சொல்றது. நல்லா நடிக்கிறடானு சொல்லும் போது, எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்கனு சொல்லும்  போது, ஏதோ சரியா பண்ணுறேனு தோணுது. ( குரலில் மகிழ்ச்சி)  

                                                                                                                                                                யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வுரும்புகிறீர்கள்?


கண்டிப்பா என் friends- தான்...  சின்ன வயசில இருந்து என் கூட இருந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லனும், Industry-ல இருக்குற friends-சும்.  குறிப்பாக நான் வொர்க் பண்ண இயக்குநர்கள். அவங்களுக்கு தான் முக்கியமா நான் நன்றி சொல்லுவேன். இவனுக்கு ஒரு திறமை இருக்கு. இவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் அப்டினு எனக்கு chance கொடுத்தாங்கள்ல! அந்த வரிசையை பார்த்தீங்கனா...Kavi Nanthan  , Shalini  , Director Loga சாரா இருக்கட்டும், Viknish Lokarag Asokan இருக்கட்டும். தவிர, Short Film நானே டைரக்ட் பண்ணிருக்கேன், என்னோட music video டைரக்டர்ஸா இருக்கட்டும். எல்லாருமே இதுவரைக்கும் யுவாவ இந்த ஒரு விஷயத்துக்கு எடுக்கலாம்னு எனக்கு வாய்ப்பு கொடுத்த produces, directors. இவுங்க எல்லாருக்கும் என்னோட பெரிய நன்றி . குறிப்பாக என்னோட அப்பா அம்மா, அவுங்களோட ஆதரவு இல்லாம என்னால டைரக்ட் பண்ணிருக்க  முடியாது. And of course என்னோட  friends.

துவரை கற்றுக் கொண்டது ?

நமக்கு ஒரு கனவு இருக்கு, நமக்கு ambition இருக்கு. யாரு என்ன பேசுனாலும், அத நம்ம motivate  பண்ற விஷயமா எடுத்துக்கனுமே ஒழிய.... நம்மால முடியாதுனு ஒருத்தங்க சொல்லிட்டா,    ஓ நம்மால முடியாது போல அப்டினு துவண்டு போய்ட கூடாது. நம்மால எது முடியும்னு நமக்கு தான் தெரியும். எனக்கு இந்த talent இருக்கு, நம்மால சாதிக்க முடியும்னு அவுங்ககிட்ட நாம proofe பண்ணி காட்டனும். இப்ப எங்கிட்ட முடியாது சொன்னவங்களுக்கு அதை தான் நான் நிரூபிச்சிக்கிட்டு இருக்கேன்.

என்ன பொருத்த வரைக்கும் great lesson learn  பண்ணிக்கிட்டேன். என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாதுனு! இந்த துறையில இருக்கும் போது , நம்மல நாமே ஒரு இடத்துல தூக்கி வெக்கிறதுக்கு எந்தளவுக்கு போராடனுங்கிறத தெரிஞ்சிக்கிட்டேன்.


ந்த ரோல் கொடுத்தாலும் என்ன விட வேற யாரும் சிறப்பா செய்திட  முடியாதுங்குற அளவுக்கு நான் perform பண்ணனும். அது தான் என்னோட இலக்கு. இப்போ, தென்னவன் கேரக்டர் எல்லாரும் செஞ்சிடலாம். ஆனா இவரு செஞ்சதால தான் அது Best-டா இருக்குனு சொல்றாங்கல்ல.... அதான்! நான் செய்யுற கேரக்டர்.. மத்தவங்களுக்கு dream role -லா இருக்கனும். யுவா செஞ்ச கேரக்டர் மாதிரி கிடைக்கனும்னு மத்தவங்க சொல்லனும்....!

னவு கதாபாத்திரம் ?


அது வந்து... அது வந்து.... ஆஹா, எல்லாத்தையும் இப்போவே சொல்லிட்டா எப்படி? பகுதி 2 வரைக்கும் காத்திருங்கோ!


- தொடரும் !


Saturday, 30 May 2020

பெருந்தலைவர் 'இஞ்சே' கபார் பாபா!

யாத பதவி ஆசை, நாள்தோறும் நாற்காலி சண்டை, கண்ணிமைக்கும் நேரத்தில் கட்சித் தாவல், பறந்து போன கட்சிக் கொள்கைகள், படார் படாரென பல்டி என நமது அண்மைய கால அரசியலும், அரசியல்வாதிகளின் 'அட்டூழியங்களும்' மனதைச் சோர்வடையவும் வெறுப்படையவும் வைக்கின்றன. 2018 பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்கள் குறிப்பாக இளையோர் மத்தியில் பரவலாக ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு இது போன்ற 'வரலாற்றுச் சிறப்புமிக்க' சம்பங்களால் வந்த வழியே போய் விடும் போலிருக்கிறது.
ந்த நேரத்தில், பலர் மறந்து போன நம் பெருந்தலைவர் கபார் பாபாவை நினைவுக் கூற விரும்புகிறேன். பள்ளி ஆசிரியர் முதல் நாட்டின் துணைப் பிரதமர் என்ற இரண்டாவது மிகப் பெரியப் பதவியை பெயரளவில் என்றில்லாமல் உண்மையிலேயே அலங்கரித்த உத்தமர். தேசியவாதியான கபாரின் அனுபவத்துக்கு, தேசத் தந்தை துங்கு அப்துல் ரகுமான், துன் அப்துல் ரசாக் ஆகியோருக்கு அடுத்து, நாட்டின் சக்தி வாய்ந்தப் பதவியை அவர் அலங்கரிப்பார் என எல்லாராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர்.

னால், நாம் கண்ட அரசியல்வாதிகளுக்கு நேரெதிர் மாறாக ஆட்சி அதிகாரத்தையும், பதவி சுகத்தையும் கண்டு மயங்காதவர் கபார். எத்தனையோ முறை உயர் பதவிகள் தேடி வந்தும் அவற்றை நிராகரித்து அரசியலில் கடை நிலை ஊழியனாகவே இருக்க விரும்பியவர். ஒரு கட்டத்தில் துங்கு 'மருட்டல்' விடுத்தப் பிறகே மலாக்கா முதல் அமைச்சர் பதவியை ஏற்க ஒப்புக் கொண்டார்.
த்திய அமைச்சரவையிலும் வற்புறுத்தலின் பேரிலேயே பங்கெடுத்தவர், பிறகு அவராக ஒதுங்கிக் கொண்டார். இன்று போகச் சொன்னாலும் முடியாது என வீம்பு காட்டுபவர்களுக்கு மத்தியில் தானாகவே ஒதுங்கியவர். ஆனால், விதி, அவரே விலகிச் சென்றாலும், அவர் சார்ந்திருந்த கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும், நாட்டுக்கும் அவரின் சேவை தொடர்ந்து தேவைப்பட்டது.

துங்குவுடன் கபார் பாபா

காதீர் அரசுக்கும் மலாய் ஆட்சியாளர் மன்றத்துக்கும் முதன் முறையாக வெளிப்படையாகவே மோதல் வெடித்த போதும் சரி, பின்னர் மலேசிய சீனர் சங்கம் MCA-வில் ஏற்பட்ட தலைமைத்துப் போராட்டத்தின் போதும் சரி, அதன் பின்னர் மகாதீருக்கும் அப்போதையத் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாமுக்கும் இடையில் வெடித்த மோதலின் போதும் சரி, கபார் வலுக்கட்டாயமாக மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டார். அம்மூன்று சம்பவங்களிலும் தனது அரசியல் சாணக்கியதால் நிலைமையைச் சரி செய்தவர் கபார். குறிப்பாக, MCA-வில் பஞ்சாயத்து செய்து வைத்து கட்சியைப் பிளவுறாமல் தடுத்த கபாருக்கு நன்றி விசுவாசமாக, MCA தலைவர்கள் ஆண்டு தோறும் அவரின் பிறந்தநாளுக்கு கேக்குடன் சென்று நல்ம் விசாரிப்பர்.
ளிமையின் வடிவமாய் திகழ்ந்த கபார், 1993-ஆம் ஆண்டு வழக்கம் போலவே மகா தீரரின் அரசியல் விளையாட்டுக்குப் பலியாகி வீழ்ந்தவர். தான் வளர்த்த 'தங்க மீனை' தமக்கு அருகில் கொண்டு வரும் முயற்சியில் ஓசையே இல்லாமல் மகாதீரால் ஓரங்கட்டப்பட்டவர் தான் கபார்.

னால், அப்போதும், நிதானம் தவறாமல் தான் வகித்த அனைத்துப் பதவிகளையும் துறந்து விட்டு, யாரையும் வசைப்பாடாமல் ஒதுங்கியவர்... மறுநாளே ஓய்வெடுக்க வெளிநாடு புறப்பட்டார். ஒரு பிளாஸ்டிக் பையுடன் சுபாங் அனைத்துலக விமான நிலையத்தில் யாரோ எவரோ போல் அவர் நின்ற காட்சிகள் இன்றும் என் கண் முன்னே வந்து போகின்றன. ( மகாதீர் மீது எனக்கு முதன் முறையாக கோபம் வந்தது அப்போது தான் ) 
ர் அரசியல் மாமேதையிடம் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் ஒருங்கே கொண்ட கபார் பாபா, தனது கடைசி அரசுப் பதவியான துணைப் பிரதமர் வரையில் வெறும் இஞ்சே (Encik)- வாகவே அழைக்கப்படுவதை விரும்பியவர். தனது பதவிக் காலத்தில் தம்மைத் தேடி வந்த அனைத்துப் பட்டங்களையும் புன்னகையுடன் நிராகரித்தவர். அரசியல்வாதி என்பவன் மக்களுக்கு சேவை செய்பவன் என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் நிரூபித்துக் காட்டிய கபாப், பதவி விலகிய ஈராண்டுகள் கழித்தே நாட்டின் உயரிய 'துன்' விருதை ஏற்றுக் கொள்ள இணங்கினார்.
துன் கபார் பாபா இன்று உயிரோடு இருந்திருந்தால் நடப்பவற்றை கண்டு நிச்சயம் வெம்பியிருப்பார். அரசியல் களத்தில் அரிதாய் பூக்கும் குறிஞ்சி மலர் கபார் பாபா. அவரின் கீர்த்தி ஓங்குக!

#சிந்தித்தவேளை #வியன் தலைவணங்குகிறது 🙏

Sunday, 17 May 2020

வாங்கக்கா வாங்க!

Facebook-கில் 'KKM அக்கா' என செல்லமாக வலம் வருபவர் கிருஷ்ணகுமாரி. அறிந்தோருக்கு அவர் ஓர் இரும்புப் பெண்மணி. பேச்சிலும் செயலிலும் அதிரடி நிச்சயம். அதனாலேயே பலருக்கு அவர் முன்னுதாரணம்.  குணத்திலும் அவர் தனி ரகம் தான். உபசரிப்பிலோ அவரை மிஞ்ச ஆளில்லை. அவரின் அன்பைப் பெற்று விட்டால் வீட்டுக்கே வரவழைத்து வயிறாற சாப்பாடு போட்டு அனுப்புவார்.    

வரின் சமையலை சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் அதனருமை. அந்தளவுக்கு நம்மூர் ரசம் முதல் அசலூர் கசம் வரை எல்லா சமையலும் அவருக்கு அத்துப்படி! 

வ்வொரு நாளும் அவர் என்ன சமைத்துப் போடப் போகிறார் என ஆர்வத்தில் காத்திருக்கும் facebook நட்பு வட்டம் அதிகம். 

ரவா பிரியாணி + ஆட்டிறைச்சி உப்புக் கறி 
சாதாரண நாட்களிலேயே சமைத்து வெளுப்பவர் என்றால், எல்லாரும் வீட்டில் இருக்கும் இந்த MCO காலத்தில் சும்மா இருப்பாரா? பின்னி பெடலெடுத்து விட்டார்.

சியாறை , மதிய உணவு, தேநீர் நேரம், இரவு உணவு என பம்பரமாய் சுழன்று அசரடித்து வருகிறார்.

ல வித பதார்த்தங்கள், பார்ப்போர் பரவசப்படும் வண்ணக் கலவைகள்.

வர் பதிவேற்றும், பகிரும் புகைப்படங்களுக்கு வரும் கமெண்டுகளே சொல்லி விடும் சமையலில் அவர் கைராசிக்காரர் என்று.

பாராட்டுகள் போலி அல்ல, உண்மை !

சியாறையே 'பறந்தால்' மற்ற நேரங்களுக்கு எப்படி இருக்கும்?

தோ Rasiah அக்காவின் கைவண்ணங்கள்....

நாம் வஞ்சரம் மீன் வறுவல் என்றால் அவர் சுறா மீன் குழம்பு, சுறா புட்டு என போய் விடுவார்.

நாம் இறால் பிரியாணி என்றால் அவர் ரவா பிரியாணி என இன்னொரு விதத்திற்கு shift ஆகி விடுவார்.

நாம் ஆட்டிறைச்சி பிரட்டல் என்றால் அவர் ஆட்டிறைச்சி உப்புக் கறிக்குப் போய் விடுவார்.

நாம் பூரி என்றால் அவர் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சப்பாதிக்குப் போய் நிற்பார்.

ப்படி வாரா வாரம் சமையலில் அசரடித்து விடுபவர் அதோடு நின்று விட்டால் எப்படி?

ற்றுக் கொடுத்தால் மற்றவரும் பயன் பெறுவர் அல்லவா?

தற்கு முன்னோட்டமாகத் தான் அண்மையில் நேரலைக்கு ஏற்பாடு செய்து பிள்ளையார் சுழிப் போட்டு விட்டார் என் தமிழ் வண்ணங்கள் 
முகநூல நிறுவனர் செந்தில் நாதன் 

ந்த நேரலையில் பலர் அறவே கேட்டிறாத ரவை பிரியாணியை செய்து அசத்தினார்.

தற்கு 'கொம்போ'வாக ஆட்சிறைச்சி உப்புக் கறியை செய்துக் கொடுத்தார்.


ம்மவர் சமையல் மட்டுமல்ல, எல்லா சமையலிலும் அத்துப்படி என்றே தொடக்கத்திலேயே கூறி விட்டேன். ஆனால், மலாய்க்காரர்களின் விருப்ப உணவுகளில் ஒன்றான Wajik-கிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை.

பெருநாட்களுக்கு அவரிடேம் ஆர்டர் கொடுத்து வாங்குபவர்கள் அதிகம்.

அக்காவின் special Wajik 


பாட்டியின் சூப்பர் சமையலை ருசிக்கும் செல்லப் பேரன்கள்


வாழ்நாளில் அப்படியொரு சுவைமிக்க உணவை வெளுத்துக் கட்டிய அந்த நாளை #சிந்தித்தவேளை என்றைக்கும் மறக்காது 

வி
ரைவிலேயே You Tube Chanell-லில் வலம் வர வேண்டும்; வருவீர்கள் என்ற நம்பிக்கையில் #சிந்தித்தவேளை

வாங்கக்கா, சீக்கிரமே வாங்க !  #MCO #CMCO #PKP #PKPB #KKM #RASIAH

Saturday, 16 May 2020

எளிமையால் விரிந்த எல்லை!

லை நிகழ்ச்சிகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பேட்டியோ குறித்த நேரத்தில் தொடங்கவில்லை என்றால் வழக்கமாக என்ன நடக்கும்?

பொறுமை இழந்தவர்கள் நிச்சயம் எழுந்துப் போய் விடுவார்கள் அல்லது கோபத்தில் வசைப் பாடுவர். சிலர் கோபத்தை அடக்கிக் கொண்டு ஏதோ ஒப்புக்குக் காத்திருப்பர். அது எவ்வளவுப் பெரிய 'அப்பாடக்கர்' ஆனாலும்!

னால், அண்மையச் சம்பவம் எனக்கு முற்றிலும் வியப்பாக இருந்தது.

லேசியர்கள் முனுமுனுக்கும் பெயராக மாறியுள்ள YouTube பிரபலம் Sugu Pavi அல்லது பவித்ராவின் நேரலைப் பேட்டிக்கு மண்ணின் மைந்தன் மலேசியா MMM ஏற்பாடு செய்திருந்தது.

பவித்ரா
லாய் ஊடகங்கள், செய்தி அலைவரிசைகளுக்கு தொடர் பேட்டியளித்து படு 'பிசி' யான பவித்ராவின் முதல் தமிழ் நேரலை என்பதால் நம் மக்கள் மத்தியில் ஆர்வம் பெருமளவில் காணப்பட்டது. MMM-மின் விளம்பர போஸ்டர்கள் ஏராளமானோரால் பகிரப்பட்டு பலரிடம் விஷயத்தைக் கொண்டுச் சேர்த்தது.

சொன்னபடி வியாழன் இரவு 9 மணிக்கு நேரலை நடத்துநர் ரேவதி 'ஆஜராகி' விட பவித்ராவைக் காணவில்லை. ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறதே தவிர, அனைவரும் காத்திருந்த பவித்ரா வரவில்லை.

கீழே 'கமெண்ட்' அடிப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ அல்லது பாதியிலேயே போய் விடுவார்களோ என எனக்குள்ளேயும் தவிப்பு இருந்தது.

னால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பவித்ரா சமூக வலைத்தலங்களுக்குப் புதியவர் அதிலும் Instagram இப்போது தான் அவருக்கு அறிமுகம். ஆக, நேரலைக்கு வருவதில் சற்று தடுமாற்றம் , தாமதம் ஏற்படுகிறது என ரேவதி விளக்கினார்.


நேரலைக்கு வந்து காத்திருந்தவர்கள் அதனை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு பவித்ராவுக்குக் காத்திருப்போம் என்றனர். 10 நிமிடங்களைத் தாண்டியப் பிறகும், உள்ளே வந்தவர்களின் எண்ணிக்கைக் குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போனது.

ரு வழியாக நேரலைக்கு வந்த பவித்ரா தாமதத்திற்கான காரணத்தை வெகுளியாக விளக்கிய விதத்தை ரசிகர்கள் மிகவும் Cool-லாக எடுத்துக் கொண்டதைக் காண முடிந்தது.

தெல்லாம் ஒரு விஷயமா என நீங்கள் நினைக்கலாம். ஆமாம், எனக்கு இது பல விஷயங்களை உணர்த்தியது. அவர் தொலைக்காட்சி-வானொலி பிரபலமோ, கலைத்துறை கவர்னரோ கிடையாது. அரசியலில் முக்கியப் புள்ளியும் அல்ல.  கணவர் இரு பிள்ளைகள் என மிக மிக சாதாரண, எளிமை வாழ்க்கை வாழும் இல்லத்தரசி.

ரு மாதத்திற்கு முன்பு வரை அவரை யாரென்றே தெரியாது.  இன்று நாடே பேசுகிறது. அவரின் பேட்டியைக் காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தாமதம் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

த்தனைப் பேருக்கு இப்படி ஒரு 'அந்தஸ்து' கிடைக்கும்? பவித்ராவுக்கு அது சாத்தியமாகியிருக்கிறது. எப்படி?

மெல்லிய குரல், அதிகாரமில்லா தொனி, எளிமையான மொழி நடை, மலாய் மொழியில் சரளம், வெகுளிச் சிரிப்பு, எளிதான சமையல் குறிப்புகள், சுத்தமான செய்முறை, மிகச் சிறந்த ஒத்துழைப்பாக கணவன், அழகான இரு குழந்தைகள் இவ்வளவு தான்.....

மிக மிக குறுகிய நாட்களிலேயே 4 லட்சம் பேர் இவரின் YouTube Channel -லை Subscribe செய்திருக்கிறார்கள். வழக்கமாக யாரும் செய்யாத விதமாய் சமையல் செய்யும் போது மலாய் மொழியில் அவர் உரையாடுவதால் ஏராளமான மலாய்க்காரர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார்.

4 லட்சம் subscriber-கள்

வர் பதிவிடும் காணொளிகளின் கீழ் வரும் கமெண்டுகளை படித்தால் நமக்கே புல்லரித்து விடும். அந்தளவுக்கு அவரைப் பாராட்டி வேற்றின சகோதரர்கள் இடும் பதிவுகள் மனதுக்கு இதமாய் இருக்கிறது.

ரேவதியுடனான நேரலை பேட்டியின் போது சமையல் Channel-லைத் தொடங்க எண்ணம் தோன்றியது எப்படி, சந்தித்த சவால்கள், வரவேற்பு என பல்வேறு விஷயங்களை தனக்கே உரித்தான எளிமையுடன் பகிர்ந்து கொண்ட பவித்ரா, எல்லாரும் ஆச்சரியப்படும் வகையிலான ஒரு தகவலையும் கூறி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தினார்.

தாவது நாட்டின் பிரதமரே தமக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து அட்டை அனுப்பி, நலம் விசாரித்தத் தகவலை அவர் கூறிய போது, ரேவதி அதற்கு கொடுத்த reaction-னே போதும்.

பிரதமர் Tan Sri Muhyiddin Yassin -னின் அலுவலக அதிகாரிகளே தொடர்பு கொண்டு அவர் அனுப்பிய உதவிப் பொருட்கள் கிடைத்தனவா என்று கேட்ட தகவலை பகிர்ந்துக் கொண்டார். அதைத் தவற விட்டவர்களுக்கு இதோ அந்த காணொளி.


முன்னதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Datuk Seri Reezal Merican Naina Merican அவர்களும் பவித்ரா மற்றும் அவரின் கணவர் சுகுவுடன் நேரலையில் பேசினார்.


இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருடன்

நீ
ண்ட இடைவெளிக்குப் பிறகு நமது தங்கமொன்று மிளிரத் தொடங்கியுள்ளது. வரும் அங்கீகாரம் அனைத்திற்கும் தகுதியான தங்கமது. நண்டு கதை இடையூறாக இல்லாமல் இன்னும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். நமது ஆதரவும் ஒத்துழைப்பும் அவருக்கு அவசியம்.

வித்ராவின் சமையல்களில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த 'சார்டின் புளிச்ச கீரை' காணொளி இதோ:

சார்டின் புளிச்ச கீரை 
விருப்பமும் விடாமுயற்சியும் மனம் தளராமையும் இருந்தால் யாராலும் சாதிக்க முடியும் என்பதே நமது YouTube Sensation பவித்ரா நமக்கு உணர்த்தியுள்ள பாடம்!

#சிந்தித்தவேளை -யின் வாழ்த்துகள்!

#வியன் #சுகு #பவித்ரா #SuguPavi #SuguPavithra

KL இளைப்பாறிய வேளை, கண்களால் களவாடிய காளை!

லைநகரை அப்படி நாம் பார்த்திருக்க மாட்டோம்!

எப்படி ? அப்படித்தான்.... ஆம் மெல்ல வருகிறேன் கதைக்கு...!

தினமும் காலையிலேயே சாலைகளில் வாகனங்கள் வரிசைப் பிடிக்க, அவற்றின் இயந்திர சத்தம் காதைப் பிளக்க,
மக்கள் நடமாட்டம் பரபரக்கக் காணப்படுவது தான் நமது மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்.

காலையில் எழும் பரபரப்பு மாலையில் மக்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் போது குறையத் தொடங்கும். குறையுமே ஒழிய, மறையாது!

ஆனால், கொரோனா வைரஸ் கிருமிப் பரவலைத் தடுக்க மார்ச் மாத மத்தியில் அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, MCO -வை கொண்டு வந்த போது நிலைமையே தலைக்கீழானது.

இதுவா நாம் பார்த்துப்  பழகிப் போன கோலாலம்பூர் என அசந்துப் போகும் அளவுக்கு நேரெதிர் மாற்றம்.

சாலைகளில் வாகனங்கள் இல்லை; நெரிசல் இல்லை; மோட்டார் சத்தம் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லை!

ஆம், கோலாலம்பூர் கொஞ்சம் இளைப்பாறியது!

அக்காட்சியை அக்கணமே கேமராவில் கொஞ்சிட எண்ணம் தோன்றியிருக்கிறது ஓர் இளைஞருக்கு... 

நெகிரி செம்பிலான், போர்டிக்சனைச் சேர்ந்த சிவக்குமார் Aerial Photography அதாவது வான்வழி புகைப்படம் எடுப்பதில் வல்லவர்.

Drone கேமரா மூலம் இருந்த இடத்திலேயே படமெடுப்பது இவரின் பொழுதுப் போக்கு.

இயற்கை, வானுயர் கட்டடங்கள், என கண்களைக் குளிர்விக்கும் காட்சிகள் பல ஏற்கனவே அவரின் கேமராவில் சிக்கியிருக்கின்றன.

MCO காலத்தில் மனிதர் சும்மா இருப்பாரா? 'ஓய்வெடுத்த' கோலாலாம்பூரை நம் கண் முன்னே தத்ரூபமாக கொண்டு வந்து விட்டார்.

நிசப்தமான KL-லை கனக்கச்சிதமாக படம் பிடித்து பரவசப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், யாருக்கும் எவ்வித சேதமும் வராத வகையில் நேர்த்தியாக வேலையை முடித்திருக்கிறார்.

தனது கைவண்ணங்களை சமூக வலைத்தலங்களில் அவர் பகிர, இணையத்தளவாசிகள் அப்படங்களைக் கண்டு வியந்தனர். Share மட்டுமே பத்தாயிரத்தைத் தாண்டியது.

தொழில்முறை புகைப்படக் கலைஞர் அல்ல. ஆனால், அவரின் கைவண்ணம் கண்டு, நம் மனம் உண்மையை ஏற்க மறுக்கும். அத்தனை நேர்த்தி!

அவரின் MCO காலத்து கைவண்ணம் இதோ....

AKLEH நெடுஞ்சாலை அள்ளுகிறதா ?

விலாயா பள்ளிவாசல்

ஆளில்லா பத்து மலை 

கம்போங் பாரு 

கூட்டரசு நெடுஞ்சாலை



Saloma Link




கோலாலம்பூர் கோபுரம்

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம்

வீடியோவில் வித்தியாசம் தெரிகிறதா? 

Unique அதாவது தனித்தன்மை அவரின் கைவண்ணத்தில் வெளிப்படுகிறதல்லவா?

புகைப்படங்களை எடுப்பது ஒரு பொழுதுப் போக்கு தான் என்றாலும், ஆர்வம் அதிகரித்து விட்டால், அது வேற லெவல் தான். அதற்கு  மிகச் சிறந்த உதாரணம் சிவக்குமார்.

Drone மூலம் அவர் எடுத்தப் புகைப்படங்களுக்கு பெருமளவில் பாராட்டுகள் குவிந்தாலும் புகார் செய்தவர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால், விதிமுறைகள் எதனையும் மீறாத நான் ஏன் பயப்பட வேண்டும் என்கிறார் சிவா தில்லாக.

சுற்றுப்பயணி, மலையேறி, நெடுந்தூர ஓட்டக்காரர், சைக்கிளோட்டக்காரர் என All Rounder அதாவது அனைத்திலும் வலம் வருகிறார் மனிதர்.

திறமைகள் நம்மிடையே கொட்டிக் கிடக்கின்றன. நாம் தான் அருகில் இருந்தாலும் அறிவதில்லை.

ந்த #MCO பற்றி எதிர்காலம் பேசும் போது நிச்சயம் சிவக்குமாரின் கை வண்ணமும் கண்டிப்பாக பேசப்படும்....

சிவக்குமாரின் புகைப்படச் சோலையைக் காண  இங்கே சொடுக்கவும் !


#MCO #CMCO #PKP #PKPB #Covid19 #CoronaVirus
#Malaysia #Drone #AerielPhotography #Viyan #வியன் 

Thursday, 14 May 2020

தனிமைப்படுத்தப்படுகிறாரா மகாதீ(ர)ர் ?


2020, மலேசியர்களுக்கு எட்டாத கனவானாலும் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்தும் ‘பழம்’ கை நழுவிப் போன பல சம்பவங்களை நமக்கு ‘விருந்தாக்கியிருக்கிறது’!

த்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எட்டாவது பிரதமர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட மே 10-ஆம் தேதியும் கடந்து போய் விட்டது.

2018-ல் ஆட்சி மாறி, அன்வார் சிறையில் இருந்து விடுதலையாகி, மாமன்னரிடம் இருந்து பொது மன்னிப்புப் பெற்று, பின்னர் Port Dickson இடைத்தேர்தலிலும் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு நுழைந்து பரபரப்பானதில் இருந்தே அவர் இம்முறை எப்படியாவது பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடுவார் என பெருவாரியோர் நம்பினர்.

ன், அன்வாரே கூட முழுமையாக நம்பியிருப்பார்.

னால் அது இன்னமும் கனவாகவே நீடிப்பது வருத்தம் தான்.

தவி ஒப்படைப்பு வாக்குறுதி ஆயிரம் முறை மகாதீரின் வாயாலேயே மறு உறுதிபடுத்தப்பட்ட போதும், அது கடைசி வரை நிறைவேற்றப்படவில்லை.

செல்வாக்கு சரிந்து போன தனது தலைமைத்துவதத்திற்கு எதிராக இடைத்தேர்தல்களில் மக்கள் பொங்கி எழுந்த போதே, தானாக விலகி பதவியை ஒப்படைத்திருக்கலாம்.

னால் காலத்தின் கோலம் அவரே இன்று பதவி பறிபோய் அமர்ந்திருக்கின்றார்.

ன்றாலும் 95 வயதிலும் மனிதர் அசரவில்லை; தனது ’மாணவர்’ முகிதின் யாசின் பிரதமராக வலம் வருவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தனால் தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிய ஆர்வம் காட்டுகிறார்.

‘கொல்லைப்புற’ அரசாங்கத்தின் பிரதமர் என முகிதினையும் அவரின் தலைமையேற்றுள்ள Perikatan Nasional கூட்டணியையும் தொடர்ந்து சகட்டுமேனிக்கு சாடி வருகிறார்.

தில் நகைச்சுவை என்னவென்றால் இருவருமே ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள்; அதிலும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர்கள்.

முகிதின் பதவிக்கு வந்த நேரம் கொரோனா வைரஸ் சீற்றம் அதிகமானதால் அவர் அதில் ‘பிசி’யாகி விட, தமக்கு எதிராக Pakatan தலைவர்கள் 
நாள்தோறும் தொடுத்து வரும் தாக்குதல்களை அலட்டிக் கொள்ளவில்லை.


சும்மா இருப்பாரா சாணக்கியர்? நாடாளுமன்றத்தில் ஒரு கை பார்த்து விட்டு தான் மறு வேலை என்ற அளவுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை போய் விட்டார்.

த்தீர்மானமும் மக்களவை சபாநாயகரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ‘கோதா’ திறக்கும் தேதிக்கு காத்திருக்கிறது.

னால், …… ஆனால் இதில் ஒரு விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

முகிதின் யாசினை வீழ்த்தும் வேட்கையில் மகாதீர் மட்டுமே முன்நிற்கிறார்; களத்தில் வேறு யாரையும் காணவில்லையே என்ற சந்தேகம் வராமல் இல்லை.

ள்ளபடியே பார்த்தால், எதிர்கட்சித் தலைவராகப் போகும் அன்வார் தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும்.  

PKR, DAP, AMANAH ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த 92 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் அவர். 

ம்முயற்சியை அவரே முன்னெடுத்திருந்தால், பிரதமருடன் நேருக்கு நேர் மோத தாம் தயார் நிலையில் இருப்பதை மக்களிடத்தில் காட்டிக் கொள்ள அவருக்கு அருமையான வாய்ப்புக் கிடைத்திருக்கும். 

னால் ஏனோ அவர் அதை செய்யவில்லை.

திர்கட்சி வரிசையில் தனிப்பெரும் கட்சியான DAP-யாவது களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

மாறாக, பதவி பறிபோன, பலம் குறைந்து வெறும் 5 MP-களுடன் மட்டுமே இருக்கும் மகாதீர் அத்தீர்மானத்தை முன்மொழிகிறார்.

முன்னதாக, மகாதீருக்கு ஆதரவாக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தக் WARISAN கட்சித் தலைவர் ஷாஃபியி அப்டால் மனு செய்திருந்தார். 

க்கட்சி Pakatan-னின் நட்புக் கட்சியே தவிர கூட்டணிக் கட்சி அல்ல. 

ப்போது கூட அந்நடவடிக்கையை PKR, DAP, AMANAH கட்சிகள் வெளிப்படையாக ஆதரித்து அறிக்கை வெளியிடவில்லை. 

ஷாஃபியி முன்மொழிந்த தீர்மானம் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி நிராகரிக்கப்பட்டது தெரிந்ததே. 

முன்னாள் மத்திய அமைச்சர், நடப்பு முதல் அமைச்சர் ஒருவர் எப்படி அப்படியொரு நடவடிக்கைக்கு முயன்றார் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. போகட்டும் விடுங்கள்!

ரி, மகாதீரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்ட பிறகும் கூட, அதற்கு ஆதரவாக நாங்கள் வாக்களிப்போம் என Pakatan சார்பில் இதுவரை கூட்டறிக்கை வந்ததாக என் நினைவில் இல்லை. 

தன் தலைவர்கள் ஆங்காங்கே குரல் கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் இல்லை.

னால், ஆளும் கூட்டணியின் பெரும் கட்சியான தேசிய முன்னணியோ உடனே கூட்டம் போட்டு, முகிதின் அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்து வாக்களிப்போம் என அறிவித்தே விட்டது.  

க, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில் Pakatan கட்சிகள் ‘நின்று கவனிப்போம்’ என்ற விதத்தில் தான் இருக்கின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது. 

டந்த மாத வாக்கில் அன்வார் முகிதினைச் சந்தித்து பேசியதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தவி ஒப்படைப்பு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மகாதீரின் நடவடிக்கைகளை Pakatan கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக PKR சற்று எச்சரிக்கையுடன் அணுகுவது நன்றாகப் புலப்படுகிறது. 

ன்னொரு முறை மகாதீர் நம்ப வைத்து ஏமாற்றி விட்டாரே என புலம்பல்கள் அக்கட்சியினர் மத்தியில் நிலவுவதை மறுக்க இயலாது.

ன்னதான் தங்களிடம் 114 MP-கள் இருப்பதாக மகாதீர் கூறிக் கொண்டாலும், ஆகக் கடைசி நிலவரப்படி Pakatan வசம் 108 MP-கள் இருப்பதாகவே தெரிகிறது. ஆட்சியமைக்கத் தேவைப்படும் 112 இடங்களை விட 4 இடங்கள் அது குறைவாகும். உண்மை நிலவரம் ஆண்டவனுக்கே வெளிச்சம்.

லராலும் எதிர்பார்க்கப்பட்ட மே 18-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மாமன்னரின் உரையுடன் நிறைவுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. 

தாவது வேறு எந்த விவாதமும் அந்நாளில் நடைபெறாது என்பது உறுதிபடுத்தப்பட்டு விட்டதால், மகாதீரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆக விரைவாக இனி ஜூலை மாத கூட்டத்தின் போது தான் தாக்கல் செய்ய முடியும்.

பாநாயகரின் அம்முடிவை விமர்ச்சித்து மகாதீர் வரிசையாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

னால் Pakatan கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வரவில்லை.

க, நடப்பவற்றை வைத்துப் பார்க்கும் போது மகாதீர் தனித்து விடப்பட்டிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. 

மக்கு, பிரதமர் பதவி பறி போன இரண்டே மாதங்களில் தமது மகனும் கெடா Menteri Besar பதவியை இரண்டாம் முறையாக இழக்கும் விளிம்பில் நிற்பது அந்தப் பெருந்தலைவரை வெகுவாகப் பாதித்திருக்கிறது.

டாவியையும் நஜீப்பையும் பதவியில் இருந்து இறக்கியவருக்கு முகிதினை இறக்குவது பெரிய விஷயமல்ல. 

னால், காலமும் வேகமும் அதை விட அதிர்ஷடமும் இன்று அவர் பக்கம் இருக்கின்றதா என்பதே கேள்வி!

ன்றாலும், அரசியலில் மகாதீர் தனி ரகம். யாராலுமே எளிதில் கணிக்க முடியாத பழுத்தப் பழம் அவர்.

72 வயது முகிதினுக்கு எதிராக 95 மகாதீர் எடுத்துள்ள அஸ்திரம் என்னவாகும் என்பது ஜூலை வாக்கில் தெரியும்.

துவரை நமக்குத் தீனி போட ஏராளமான அரசியல் நாடகங்கள் காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 



#சிந்தித்தவேளை  #வியன் 

Tuesday, 12 May 2020

கமலுடன் ஜோடி ? : மனம் தளராத நதியா!

80-களின் கனவுக் கன்னி நதியா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட கிட்டத்தட்ட எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டாலும் உலக நாயகன் கமல ஹாசனுடன் மட்டும் கடைசி வரை ஜோடி சேரவில்லை. அது அவருக்கு எப்படியோ, அவரின் கோடான கோடி ரசிகர்களுக்கு மட்டும் இன்னமும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

ற்போது மூன்றாவது இன்னிங்சில் முதிர்ச்சியான அதே சமயம் வலுவான கதாபாத்திரங்களுடன் அவ்வப்போது திரையில் தலை காட்டும் நதியாவும் அண்மையில் அது குறித்து மனம் திறந்தார்.

தாவது கமலுடன் ஜோடி சேர அப்போதே வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அடுத்தடுத்துப் படங்களில் மிகவும் பரபரப்பாக நடித்து வந்த காரணத்தாலும் Call Sheet பிரச்னைகளாலும் அது நிறைவேறாமல் போய் விட்டதாகவும் நதியா சொன்னார்.

லேசியக் கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு நல்லதோர் அறிமுகத் தளமாக விளங்கி வரும் மண்ணின் மைந்தன் மலேசியா (MMM) Instagram பக்கத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் அவ்விவரங்களைப் பகிர்த்துக் கொண்டார்.

Actress Nadhiya@Live என்ற அந்நிகழ்ச்சியில் உள்ளூர் தொகுப்பாளினி திரேசா கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் நதியா அவ்வாறு சொன்னார்.

ன்றாலும், அவ்விஷயத்தில் நதியா இன்னமும் மனம் தளரவில்லை. இன்றையத் தேதிக்கு இருவருமே இன்னமும் நடித்துக் கொண்டிருப்பதால் இருவரும் ஜோடி சேர இன்னமும் வாய்ப்பு இருப்பதாகவே அவர் கருதுகிறார்.

னவே, 80-களில் நிறைவேறாமல் போன கமல் - நதியா ஜோடி கனவு, நிச்சயம் நிறைவேறும் என அவரின் ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

1 மணி நேரம் போனதே தெரியவில்லை நதியாவுடனான அந்த உரையாடல். நதியாவின் ஆரம்பக் கால சினிமா அனுபவங்கள், மறுபிரவேசம், சின்னத்திரை game show அனுபவம் என திரேசாவின் கேள்விகளுக்கு சளிக்காமல் புன்னகையுடன் பதில்களைக் கூறி அசத்தினார்.

குறிப்பாக தனது இளமையின் ரகசியம் குறித்த கேள்விக்கும் அவர் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். மிகப் பெரிய உணவுக் கட்டுப்பாடெல்லாம் இல்லையென்றும், உண்மையில் தாம் ஒரு foodie எனவும் அவர் கூறி ஆச்சரியப்படுத்தினார்.

வாழ்க்கையில் எப்போதும் நல்ல எண்ணங்கள் இருந்தாலே உடம்புக்கு ஒரு தெம்பு கிடைத்த மாதிரி எனக் கூறிய நதியா அதுவே கூட தாம் இன்னமும் இளைமையுடன் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

னது பதின்ம வயது பெண் பிள்ளைகள் இருவருடன் நதியா எடுத்துக் கொண்ட புகைப்படமொன்று அண்மையில் பரவலாக பகிரப்பட்டு, மலேசியாவில் கூட வைரல் ஆனது குறித்து கேட்ட போது அவர் அவ்வாறு சொன்னார்.


ன்ன, நதியாவுக்கு 53 வயதா என பலரும் ஆச்சரியத்துடன் கேட்கும் அளவுக்கு அப்புகைப்படத்தில் இளமை அழகுடன் அவர் காட்சியளித்தார்.

லேசியாவுக்கு வருகை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் அது தள்ளிப் போனதாகவும் கூறிய நதியா, அடுத்த சில ஆண்டுகளில் நிச்சயம் மலேசிய மக்களை வந்து சந்திக்கப் போவதாகக் கூறினார். குறிப்பாக, நகர் புறங்களில் அல்லாமல் மண் வாசனை கமழும் பகுதிகளுக்குச் செல்ல ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார்.


தியா பேட்டியளிக்க ஏற்பாடு செய்து அவரின் ரசிகர்களின் ஆவலைப் பூர்த்திச் செய்த MMM நிறுவனர் குமாருக்கு இவ்வேளையில் நன்றி!

#சிந்தித்தவேளை உங்களை அடிச்சிக்க ஆளில்லை நதியா! :-)

#வியன்



MMM Insta :  https://www.instagram.com/mannin_mainthan_malaysia/?hl=en