அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Sunday, 22 July 2012

புதுக்கவிதைப் போட்டி



மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் இலக்கியப் போட்டிகளில், புதுக்கவிதைப் போட்டியை மக்கள் ஓசை நாளிதழ் ஏற்று நடத்துகிறது.

பாடு பொருள்

புதுக்கவிதையின் பாடுபொருள், மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். 30 முதல் 50 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

புதுக்கவிதையில் வெற்றிப் பெறுபவதே அஃது உணர்த்தும் கருத்தே ஆகும். எனவே, கருத்துச் செறிவும் அடர்ச்சியும் படைப்பில் இருத்தல் வேண்டும்.

10. 09. 2012-ஆம் தேதிக்குள் படைப்புகள் அனைத்தும் வந்து சேர்ந்து விட வேண்டும். 


பரிசுகள்:

முதல் பரிசு : 2,000 ரிங்கிட்

இரண்டாம் பரிசு :  1,000 ரிங்கிட்

மூன்றாம் பரிசு : 750.00 ரிங்கிட்

5 ஆறுதல் பரிசுகள் : தலா 250.00 ரிங்கிட்


விதிமுறைகள்

படைப்புகள் அனைத்தும் கணினியில் எழுத்துரு 12 அளவில் ( fonts 12) தட்டச்சு செய்திருக்க வேண்டும். கணினி தட்டச்சு செய்யப்படாத படைப்புகள் ஏற்புடையதாகா. படைப்பாளர்கள் தங்களது பெயர், முழு முகவரி, தொலைப்பேசி எண்கள் ஆகியவற்றை தனித்தாளில் தேசிய மொழியில் எழுதி, அடையாள அட்டை நகலோடு அனுப்பி வைக்க வேண்டும்.

சங்கத்தின் பொன்விழாவின் போது பரிசளிப்பு நடைபெறும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

'புதுக்கவிதைப் போட்டி'
 MAKKAL OSAI
19, Jalan Murai Dua, Batu Complex off Jalan Ipoh,
51200 Kuala Lumpur.

( தொடர்புக்கு : 012-2668416 ஆ. குணநாதன் )

Saturday, 21 July 2012

மர்ம உறுப்பில் பூட்டு : நரக வேதனையில் மனைவி !

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள இந்தூர் எனுமிடத்தில் எலி பாசாணம் குடித்து தற்கொலைக்கு முயன்ற குடும்ப மாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அடைந்த அதிர்ச்சிதான் அடுத்த ஹைலட். காரணம்.... அப்பெண்ணின் மர்ம உறுப்பில் மாட்டப்பட்டிருந்த பூட்டு ! ஒரு கணம் ஆடிப் போன மருத்துவர்கள் விசாரித்ததில் அப்பெண் கூறிய வாக்குமூலம் வேதனைக்குள்ளானது.

சந்தேகத்தின் மறுபிறவியான தனது கணவனுக்கு தான் துரோகம் செய்து விடுவேனோ என்ற பயத்தில், நான்காண்டுக்கு முன் தனது மர்ம உறுப்பில் துளை போட்டு அதில் அவன் பூட்டை போட்டு விட்டானாம். தினமும் காலை வேலைக்குச்ச் செல்லும் முன் பூட்டைப் போட்டு விட்டு சாவியை எடுத்து விட்டு சென்று விடுவானாம் அந்த மெக்கானிக். சிறுநீர் கழிக்கக் கூட  சிரமப்பட்டு நரகவேதனை அனுபவித்த அப்பெண் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். கணவன் திருந்தவில்லை. பொங்கி எழுந்த அப்பெண் கணவனை ஒன்றும் செய்யாமல் தானே விஷம் குடித்து விட்டார்.

மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதான அந்த மெக்கானிக் தற்போது லாக்கப் அறையில்....

- நன்றி என்.டி.டிவி

Thursday, 19 July 2012

பறக்கும் பாவை ஜி. சாந்தி



G. Shanti
G. Shanti ( Ratu Pecut Malaysia )

நாட்டின் பறக்கும் பாவை என அழைக்கப்பட்ட ஓட்டப்பந்தய வீராங்கணை ஜி.சாந்தியின் சாதனைகளை எடுத்துரைக்கும் புகைப்படங்களுடன் Facebook பக்கமொன்றை உருவாக்கியுள்ளேன். நேரம் கிடைத்தால் இந்த முகவரியை வலம் வரவும். http://www.facebook.com/Govindasamy.Shanti

Wednesday, 18 July 2012

94 அகவையில் காலடி வைக்கும் MADIBA


நெல்சன் மண்டேலா
ஆப்ரிக்க ஜோதி
மனிதேய மாணிக்கம்
வாழும் மகாத்மா காந்தி;
கறுப்பு கண்டத்தின் வெளிச்சம் ; 
தென்னாப்ரிக்க மக்களின் விடிவெள்ளி....

என இவரை எப்படி அழைத்தாலும் தகும்.அந்த பட்டப் பெயர்களால் அவருக்கு பெருமையல்ல, அவரால் தான் அப்பட்டங்களுக்கே பெருமை என்பது ஊரறிந்த உண்மை.வெள்ளையனின் ஆட்சியில் நிறவெறிக் கொள்கை தாண்டவத்தை எதிர்த்து போராடிய போர்வாள்!.

 மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சை போராட்டமாக தொடங்கி பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு மாறி கடைசியில் கெரில்லா தாக்குதலுக்கும் தலைமையேற்றவர். விடுவானா வெள்ளையன்? மண்டேலா மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் தள்ளினான். தீவொன்றில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலாவுக்கு அடுத்த 27 ஆண்டுகள் அதுவே வீடாகிப் போனது. கொடிய சிறைவாசத்தின் ஒரு கட்டத்தில் காச நோய்க்கு ஆளாகி மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பியவர்.
இளவயது மண்டேலா

சிறைக் கம்பிகளுக்கு பின்னால் மண்டேலா



மன்னிப்புக் கேட்டால் விடுதலை என வெள்ளையர் அரசாங்கம் பேரம் பேச, உயிரே போனாலும் வெள்ளையனிடம் மண்டியிட மாட்டேன் என மண்டேலா திடமாக இருந்து விட்டார். அவரின் விடுதலைக்காக உலகமே ஓரணியில் திரள, வெள்ளையர் அரசும் மாற,  27 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து  11.2.1990-ல் சிறையில் இருந்து கறுப்பின மக்களின் ஹீரோவாக விடுதலையானார் அந்த மாமனிதர். மண்டேலா விடுதலையான காட்சிகள் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பாக, அதனைக் கண்டு ஆனந்தக் களிப்பில் கசிந்துருகாத உள்ளங்களே இல்லை எனலாம்.

 

ஆண்டுகள் உருண்டோட 1994-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி 
தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்று வரலாறு படைத்தார் MADIBA ( மண்டேலாவின் செல்லப் பெயர் ). மண்டேலாவின் ஆட்சிக் காலம் வெள்ளையர்களின் ஆட்சியில் கொத்தடிமைகளாக வாழ்ந்த கறுப்பினத்தவர்களின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைத்தது. நிறத்தால் பிரிந்து கிடந்த தென்னாப்ரிக்க மக்கள் மண்டேலாவின் பின்னால் அணி வகுத்து நின்றனர். உலக நாடுகளுக்கு தென்னாப்ரிக்காவின் கதவுகளை திறந்து விட்டார் மண்டேலா. அனைத்துலகச் சமூகத்தால் தனித்து விடப்பட்ட தென்னாப்ரிக்கா மீண்டும் தனது பாதைக்குத் திரும்பியது.

மண்டேலா மலேசியா வந்த போது அப்போதைய பிரதமர் மகாதீருடன்
மண்டேலாவுக்கு  உலகமே சிவப்புக் கம்பள வரவேற்பை நல்கியது. நாடுகளும் ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு அந்த மாமனிதரை அழைத்து விருந்து கொடுத்து பட்டங்களையும் விருதுகளையும் வாரிக் கொடுத்து சிறப்பு சேர்த்துக் கொண்டன. மண்டேலா பெரிதும் போற்றிய மகாத்மா காந்தடியடிகள் நினைவாக இந்தியா வழங்கும் அமைதி மற்றூம் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி அனைத்துலக விருதை, இந்தியாவுக்கே சென்று பெற்றுக் கொண்டார் அந்த தீர்க்கதரிசி. 

சாகும் வரையில் பதவியை விட்டு போக மாட்டேன் என அடம் பிடிக்கும் அரசியல்வாதிகளின் கன்னத்தில் அறையும் விதமாக 1999-ஆம் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட அந்த அரசியல் மாமேதை மறுத்து விட்டார்.  

 Ronaldo-வுடன் Madiba
2010 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பு தென்னாப்ரிக்காவுக்கு கிடைப்பதற்கு பெரும் பங்க்காற்றியவர் மண்டேலா என்பதும் கூடுதல் தகவலாகும். பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்ற மண்டேலாவை வயதும் உடல் நலமும்  வீட்டிலேயே முடக்கி போட்டு விட்டன. என்றாலும்  94 வயதிலும் அவரின் புகழ் மங்காமல் நாளுக்கு நாள் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. 

மண்டேலா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்  என சொல்லிக் கொள்வதில் நமக்கெல்லாம் நிச்சயம் பெருமைதானே...

94 வயது பிறந்தநாளை கொண்டாடும் மண்டேலாவுக்கு வாழ்த்துச் சொல்ல தென்னாப்பிரிக்காவுக்கே பறந்துச் சென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்.

Tuesday, 17 July 2012

மின்னலே உன் பெயர்தான் FLOJO-வா ?

உலகம் கண்ட அதி மின்னல் வேக வீராங்கணை Flojo
FLOJO என செல்லமாக அழைக்கப்படும் Florence Griffith Joyner அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அதிவேக ஓட்டக்காரர். 80-ஆம் ஆண்டுகளின் கடைசியில் உலக ஓட்டப்பந்தய அரங்கையே புரட்டிப் போட்டவர். இவர் செய்த உலக சாதனை நேரத்தை இன்று வரை நெருங்கக் கூட ஆளில்லை. 1988 சோல் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை வென்று ஒலிம்பிக் நட்சத்திரமாக மின்னியவர்.  


இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கும் Flojo-வின் உலக சாதனை நேரம்
100 மீட்டர் : 10.49 வினாடிகள் ( 1988 ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க தகுதிச் சுற்று)
200 மீட்டர் : 21.34 வினாடிகள் ( 1988 சோல் ஒலிம்பிக்)



தனிச்சிறப்பு
சிலர் ஓட்டத்தால் மட்டும் ரசிகர்களைக் கவருவார்கள், இன்னும்  சிலர் ஓட்டத்துக்குப் பிறகு வெற்றியை கொண்டாடி கவருவார்கள், ஒரு சிலர் சர்ச்சைகளால் பேசப்படுவார்கள். ஆனால் ஓட்டப் பந்தயத் துறைக்கு ஒரு புதிய Fashion-னை அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழ் பெற்றவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். ஒரு காலில் நீளமாகவும், மற்றொரு காலில் நீச்சல் உடை போலவும் அணிந்து ஓட்டத் துறைக்கே புதிய அடையாளத்தை ஏற்படுத்தியவர். பல வண்ணங்களில் நீண்டு  வளைந்த நகங்கள் இவரின் Trademark. இந்த கவர்ச்சிப் புயலைப் பார்ப்பதற்கென்றே அரங்கில் ரசிகர்கள் குவிந்து கிடந்த காலம் அது.

'நக' அழகி


 100 மீட்டரில் Flojo செய்த உலக சாதனை நேரத்தைக் காண இங்கே சொடுக்கவும்

200 மீட்டர் உலக சாதனை நேரம்


Flojo-வின் குறிப்பிடத்தக்க வெற்றிகள்...

1984 Los Angeles ஒலிம்பிக்    :  200 மீட்டர் வெள்ளி
1988 Seoul ஒலிம்பிக்           :  100 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக்           :  200 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக்              :  4x100 மீட்டர் தங்கம்
1988 Seoul ஒலிம்பிக்                 :  4x400 மீட்டர் வெள்ளி




1988 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், அமெரிக்காவின் மும்முறை நீளம் தாண்டும் வீரரான தனது கணவர் Joyner-ருடன் ஆறு மாதங்கள் அதுவும் விடியற்காலையிலேயே இராணுவத்தைஒத்த பயிற்சிகளை Flojo மேற்கொண்டிருக்கின்றார். உலகமே வியக்கும் அளவுக்கு தான் செய்த சாதனையின் இரகசியத்திற்கு அதுவே காரணமென்றும் ஒரு முறை அவர் கூறியுள்ளார்.

தனது மின்னல் வேக ஓட்டத்தால், வித விதமான ஆடைகளால், நீண்ட நகங்களால் இரசிகர்களின் மனதில் அழகுப் பதுமையாக வலம் வந்த இந்த சிறகு மான், 1998-ஆம் ஆண்டு தனது 38-ஆவது வயதிலேயே மூச்சை நிறுத்தி விட்டு உலகில் இருந்து விடைப் பெற்றுக் கொண்டது. லண்டன் ஒலிம்பிக்கிலாவது Flojo-வின் சாதனைகளை யாராவது முறியடிப்பார்களா என பார்ப்போம்.  

" 24 ஆண்டுகளுக்கு முன் 100 மீட்டரில் Flojo செய்த நேரம் 10.49 வினாடிகள். ஆனால் இன்று உலகின் அதி வேக வீராங்கணையின் மிகச் சிறந்த நேரம் எவ்வளவு தெரியுமா? 10.70 வினாடிகள் மட்டுமே ! இப்போது தெரிகிறதா Flojo-வின் சாதனை அளவு "

தீக்குளித்த முதியவரின் வாயில் ஐஸ் கிரீம்


இஸ்ரேலில் நடந்த பேரணி ஒன்றில் பங்கேற்ற 57 வயது முதியவர் திடீரென தீக்குளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். உடன் இருந்தவர்கள் மிகவும் போராடி அவரைக் காப்பாற்றி உற்கார வைத்தனர். உடல் முழுவதும் தீயில் வெந்து கொண்டிருந்த அவருக்கு சாப்பிட ஐஸ் கிரீம் கொடுக்கப்பட, அவரும் அதை வாங்கி நிதானமாக சாப்பிட்டிருக்கின்றார். 80 விழுக்காட்டு தீப்புண் காயங்களுடன் கவலைக் கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மலேசியத் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு திடீர் பாசம்

பிறந்த குழந்தை விகாரமாம் : உயிரோடு புதைத்தான் கொலைக்காரத் தந்தை!

'விகாரமாக' பிறந்தது என் தவறா?
மனிதநேயம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்பதை பறைசாற்றும் வகையில் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. தனது மனைவி பத்து மாதம் சுமந்துப் பெற்ற குழந்தையை ஆனந்தப் பூரிப்புடன் கையிலெடுத்து கொஞ்ச வேண்டிய தந்தை, அதன் முகம் விகாரமாக இருப்பதாக எண்ணி கவலையுற்றானாம். குழந்தையின் முக அமைப்பு வழக்காமன குழந்தைகளை விட சற்று மாறுபட்டிருந்ததால், ஊர் கேலி செய்யும், தனக்கு அவமானம் வந்து விடுமென்று அந்த 'வெங்காயம்' புத்திசாலித்தனமாக யோசித்திருக்கின்றது. ஆனால், அடுத்து அவனெடுத்த முடிவு தான் கோரத்தின் உச்சம். மனைவிக்கு தெரியாமல் குழந்தையை எடுத்து கொண்டு அவன் போனது  எங்கே தெரியுமா? பக்கத்தில் இருந்த சுடுகாட்டுக்கு! குழந்தையை உயிரோடு புதைத்த போது, அது வீறிட்டு அழ  சுடுகாட்டில் காரியம் செய்யும் நபர் சுதாகரித்துக் கொண்டார். ஒரே ஓட்டத்தில் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்க, அதிசமாக காவல் துறையும் ஆஜராக, தந்தை தற்போது காவலில். இதில் கூத்து என்னவென்றால், தனது தந்தையின் செயலில் அப்படி என்ன குறையை கண்டீர்கள் என்று கேட்கிறானாம், தந்தைக்கு உடந்தையாக இருந்த மூத்த மகன். இது எப்படி இருக்கு ? 

Monday, 16 July 2012

கலக்குவாரா Usain Bolt ? தடுப்பாரா Michael Phelps ?

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் London 2012 ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னமும் 10 நாட்களே எஞ்சியுள்ளன. உலகக் கிண்ணக் கால்பந்தை போலவே ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் ஒரு முறை விளையாட்டு ரசிகர்களை தொலைக்காட்சி முன் கட்டிப் போடும் மனிதநேயத் திருவிழா. 205 நாடுகள்,  15 ஆயிரம் விளையாட்டாளர்கள், 26 வகையான விளையாட்டுகள், 302 தங்கப் பதக்கங்கள்...500 கோடி மக்கள் காணப் போகும் உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழா.  ஒலிம்பிக் போட்டிகளில்  யாராவது ஒருவர் முத்திரை பதித்து விட்டு வரலாற்றில் இடம் பிடித்து விடுவார்கள்.  1896-ஆம் ஆம் ஆண்டு தொடங்கி 2008-ஆம் வரை இதுவரை நடைப்பெற்ற 28 போட்டிகளிலும் அதுதான் நடந்து வந்திருக்கின்றது. லண்டன் மண்ணிலும் அது நிச்சயம் தொடருமென்பதே பரவலான எதிர்பார்ப்பு. ஆனால் அது யாரென்பதே இப்போதையே கேள்வியாகும். இருந்த போதிலும் நினைத்தவுடனேயே கணிப்புக்கு எட்டுவது Usain Bolt, Michael Phelps ஆகிய அதிவேக வீரர்கள் இருவரும் தான். ஒருவர் தடகளத்தில் பின்னுகிறார். மற்றொருவர் நீச்சல் குளத்தை அதிர வைக்கிறார். Beijing 2008 ஒலிம்பிக்கில் நீயா நானா என்ற அளவுக்கு ஆளாளுக்குத் தங்கங்களை வாரிக் குவித்தவர். Bolt மூன்று தங்கங்களையும் Phelps எட்டு தங்கங்களையும் வென்றனர். இருவரின் அண்மைய சாதனைப் பட்டியல் இதோ.....


பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் வெற்றிக் கோட்டை எட்டுகிறார் Bolt

Usain Bolt 

Beijing 2008 ஒலிம்பிக்: 
100 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 9.69 வினாடிகள்)
200 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 19.30 வினாடிகள்)
4x100 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 37.10 வினாடிகள்)

Berlin 2009 உலகத் திடல் தடப் போட்டி 
100 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 9.58 வினாடிகள்)
200 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 19.19 வினாடிகள்)

Daegu 2011 உலகத் திடல் தடப் போட்டி
4x100 மீட்டர் தங்கம் ( புதிய உலக சாதனை நேரம் 37.04 வினாடிகள்)

8 தங்கப் பதக்கங்களை மாலையாகச் சூடியுள்ள  Phelps

Michael Phelps

2004 Athens ஒலிம்பிக் :
6 தங்கம், 2 புதிய உலக சாதனைகள், 3 ஒலிம்பிக் சாதனைகள்

2008 Beijing ஒலிம்பிக் : 
8 தங்கம், 7 புதிய உலக சாதனை நேரம், 1 ஒலிம்பிக் சாதனை


பெய்ஜிங் ஒலிம்பிக்கைக் களைக்  கட்ட வைத்த இவ்விரு ஜாம்பவான்களும் அடுத்தச் சுற்றுக்கு தயாராகி விட்டனர். அண்மையப் போட்டிகளில் இருவருமே எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் யாருக்கும் தெரியும், உண்மை பலத்தை லண்டனில் வெளிப்படுத்துவதற்காக பதுங்குகிறார்கள் என்று. இம்முறை 8 தங்கப் பதக்கங்களை வெல்வது கடினமே என்பதை Phelps ஒப்புக் கொண்டு விடார். Bolt-ட்டோ இரு தங்கங்களுக்கு குறி வைத்திருக்கின்றார். ஆனால், அந்த அதிவேக ஓட்டக்காரர்  மேலுமிரு உலக சாதனை நேரங்களுடன் லண்டனை அதிரச் செய்வார் என்றே உலக மக்கள் எதிர்பார்க்கின்றனர். எது எப்படியோ இவ்விருவரால் லண்டன் ஒலிம்பிக் களைக்கட்ட போவது மட்டும் உறுதி!


Sunday, 15 July 2012

திராட்சைக்காக 15 வெள்ளிக்கு குழந்தையை விற்றத் தாய்!

அமெரிக்கா, Honduras-சில் இளம் பெண் ஒருவர் திராட்சைப் பழத்திற்காக தனது இரண்டு மாதக் கைக் குழந்தையை மலேசிய ரிங்கிட்டுக்கு 15 வெள்ளிக்கு விற்றாராம். மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் அப்பெண்ணால் விற்கப்பட்ட அக்குழந்தை இருக்குமிடம் இன்னும் தெரியவில்லையாம்.  

திருமணமான 1 மணி நேரத்தில் மணப்பெண்ணுக்கு குழந்தை!


பிரான்சில் ஜலாய்ஸ் என்ற நகரில் நிறைமாத கர்ப்பிணி தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட உடனிருந்தவர்கள் பதறிப் போயினர். ஆனால் ஆம்புலன்ஸ் வண்டி வருவதற்குள் மணமேடையிலேயே அழகான ஆண் குழந்தைக்கு அவர் தாயானார். திருமணத்திற்கு வந்தவர்கள் 'அட ஓரே செலவாயிடுச்சே என்ற மகிழ்ச்சியில்' 'புதுவரவான' குழந்தையை வாழ்த்தி சென்றனராம். 

Saturday, 14 July 2012

எந்த வயதில் திருமணம் செய்யலாம்?

தங்கையைக் காப்பாற்றச் சென்ற அண்ணனுக்கு கத்தி வெட்டு!

கோல் மன்னன் Ronaldo



Ronaldo 







ரொனால்டோவின் சாதனைகளில் சில......

உலகக்  கிண்ணம் :1994, 2002
அதிக கோலடித்தவருக்கான தங்கக் காலணி : 2002
FIFA-வின் உலகின் மிகச் சிறந்த ஆட்டக்காரர் : 1996, 1997, 2002
உலகக் கிண்ண வரலாற்றில் மிக அதிக கோல்களை அடித்தவர் : 15
2000-2010- ஆம் தசாப்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்.



அரசுப் பல்கலைக் கழகங்களுக்கு 1,384 இந்திய மாணவர்கள்

2012/2013-ஆம் கல்வித் தவணையில் உள்நாட்டு அரசு பல்கலைக் கழகங்களில் நுழைய 38,549 மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கின்றது. அவர்களில் 1,384 பேர் இந்திய மாணவர்கள். அதாவது மொத்த எண்ணிக்கையில் 3.59 விழுக்காடு மட்டுமே!