அண்மையச் செய்தி :

E-Wallet 100 ரிங்கிட் டிசம்பரில் போடப்படும் !

Tuesday, 30 June 2020

சபாநாயகரை மாற்றுவதா? பெட்டிஷன் போட்ட Bersih!

"யாரைக் கேட்டுடா கொண்டு போனீங்க? யாரைக் கேட்டு கொண்டு போனீங்க...?"

தாம் வருவதற்குள் தந்தையின் காரியத்தை முடித்து விட்ட அண்ணன்மார்களிடம் கடைசி தம்பி வடிவேலு எகிறும் எம்டன் மகன் பட வசனம் அது.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மாற்றப்படுவதாக செய்தி வெளியானதில் இருந்து , அதற்கு எதிராக வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது #வியன் நினைவுக்கு வந்து போவது அந்த வசனமே!


" யாரைக் கேட்டுடா மாத்துறீங்க? யாரைக் கேட்டு மாத்துறீங்க?"

என கேட்பது போல் உள்ளது.

14-ஆவது நாடாளுமன்றம் அமைந்து 2 ஆண்டுகள் 2 மாதங்கள் தான் ஆகியிருக்கின்றன. முழுத் தவணை முடிய இரண்டரை ஆண்டுகள் இருக்கும் போது, பாதியிலேயே மாற்றுவது ஏன்? ஏன்? என விஷயம் அறிந்தவர்கள் கேட்கிறார்கள்.


ஆட்சி மாறும் போதெல்லாம் அது வழக்கம் தானே என வியனும் முடிந்தவரை 'சமாதானம்' கூறி வருகிறேன்.

இந்த நிலையில் தான் தூய்மையான - நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் அமைப்பான BERSIH 2.0 இன்று பெட்டிஷனே போட்டு விட்டது.

நாடாளுமன்ற சீர்த்திருத்த நடவடிக்கைகளைத் தொடரவும் வலுப்படுத்தவும் நடப்பு சபாநாயகர் Tan Sri Mohamad Arif Md Yusof பதவியில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என அந்த தேர்தல் சீர்திருத்தக் குழு கோரியுள்ளது.

" மலேசிய குடிமக்களாகிய நாங்கள், இதனால் சொல்ல வருவது என்னவென்றால், ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது சபாநாயகரை மாற்ற பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தாக்கல் செய்யவுள்ள தீர்மானத்தை, நாங்கள் நிராகரிக்கிறோம். 


"அதெப்படி, பதவியில் இருந்து நீக்குவதென்றால் சபாநாயகர், 2 துணை சபாநாயகர்களை என மூவரையும் அல்லவா நீக்க வேண்டும்? அதை விடுத்து, சபாநாயகரையும் , DAP-யைச் சேர்ந்த துணை சபாநாயகர் Nga Kor Ming-ங்கையும் மட்டும் மாற்ற தீர்மானம் கொண்டு வருவது ஏன்? முகிதின் முகாமில் இருப்பதால் இன்னொரு துணை சபாநாயகர் Rashid Hasnon-னை மட்டும் விட்டு வீட்டீர்கள்?" என BERSIH கேட்கிறது.

இடமிருந்து வலம்: Nga Kor MingTan Sri Mohamad Arif Md Yusof  | Rashid Hasnon 

வழக்கமாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் போதோ, மரணம் சம்பவிக்கும் போதோ, பதவி விலகல் நடைபெறும் போதோ தான் சபாநாயகர் நாற்காலி மாறும். இப்படி பாதி தவணையில் மாறுவதென்பது எல்லாம் மலேசிய வரலாற்றில் நடக்காத ஒன்று. என்ன விளையாடுறீங்களா? என்று கேட்காமல் கேட்கிறது BERSIH.


எனவ ஜூலை 13-ல் அத்தீர்மானம் வரும் போது அதை எதிர்த்து வாக்களிக்க அனைத்து MP-களும் முன் வர வேண்டும். 
Moh Arif மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் தொடர அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
Datuk Azhar Harun
புதிய சபாநாயகராக, தேர்தல் ஆணையத் தலைவராக உள்ள Datuk Azhar Harun கொண்டு வரப்படுவதாக தகவல். 
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறி தான் அந்த மனிதரை முந்தைய Pakatan அரசு கொண்டு வந்தது. இப்போது அதுவும் பாதியிலேயே 'பிச்சிக்கிச்சே!' நிலை தான்.
Harun கொண்டு வந்த #Undi18 எனப்படும் 18 வயதிலேயே வாக்களிக்கத் தகுதிப் பெறுவது, Automatic Voter Registration எனும் இயல்பாகவே வாக்காளர்களாகவே பதிவுச் செய்யப்படுவது போன்ற திட்டங்கள் செயலாக்கம் காணுமா அல்லது கிடப்பில் போடப்படுமா என தெரியவில்லை. (SPR-ருக்கு புதிதாக வருபவர் மனது வைக்க வேண்டுமே?) 
Harun -னை விட மேலும் இருவர் போட்டியில் இருப்பதாகவும் செய்தி.
ஒருவர் முன்னாள் 'சட்டாம்பிள்ளை' அதாங்க பழைய ஆள் Tan Sri Pandikar Main Mulia. இன்னொருவர் முன்னாள் நீதிபதியாம். ஆனால் Azhar Harun தான் லீடிங்கில் இருப்பதாகவும், ஜூலை 13-ல் பெரும்பான்மை வாக்குகளில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவது உறூதி என்பதும் தெரிகிறது.
ஒருவேளை Azhar Harun சபாநாயகராக வெற்றிப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். முகிதின் அரசு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதை அது ஊர்ஜிதப்படுத்தி விடும். அதன் பிறகு நம்பிக்கைத் தீர்மானமாவது, நம்பிக்கையில்லாத் தீர்மானமாவது? எல்லாரும் வெறும் சம்பிரதாய நடவடிக்கையாக மட்டுமே ஆகி விடும்.
ஆக, ஜூலை 13-ல் தரமான செய்கை காத்திருக்கிறது!
...வியன் அப்படித் தான் முடிப்பார் என்று நினைத்தால் அது தவறு!
நாமெல்லாம் எதிர்பார்ப்பது போன்று பெரிதாக எதுவும் நடக்கப் போவதில்லை. அமைதியாய் போய்க் கொண்டிருக்கும் ஒருவர் முகத்தில் தான் புன்னகைத் தவழப் போகிறது.
பொறுத்திருங்கள்! 

Monday, 29 June 2020

தமிழ்லெட்சுமி எங்க தங்கலெட்சுமி!


"Three Roses போலத் தானே தமிழ்லெட்சுமி!"

கடந்த சில வாரங்களாகவே #வியன் முனுமுனுக்கும் பாடல் அது.

அதுவும் நம்மூர் படைப்பொன்றின் அடையாளமாகி வரும் அம்சா!

வேறு யார்?

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு Astro வானவில் ஒளியலையின் முன் அனைவரையும் உட்கார வைத்து விடும் நம்ம 'தமிழ்லெட்சுமி தான்!
என்னடா, சின்னத்திரை தொடருக்கெல்லாம் 'ரிவியூவா' என்றால்? இருக்கட்டுமே, என்ன வந்து விடப் போகிறது?

வியன் என்றுமே கடைநிலை ரசிகன்; அவன் ரசிப்பதை புதைக்காமல் பதிவாக்கி வைக்க விரும்புகிறான்.(இது தேவையே இல்லாத விளக்கம் அல்லவா? ) 😅

சரி, தமிழ்லெட்சுமி வந்தாள், நிற்கிறாள், வென்றாளா?

அதை கடைசியில் பார்ப்போம்.....

கதை என்ன என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

கதைமாந்தர்களை நான் பார்க்கிறேன் 💘


Devendran Sarimirgan

வெளிப்படையாகவே சொல்வேன். இத்தொடரில் வியனுக்கு விருப்பமானவன் இவவென்று. மனிதருக்கு உடல் மொழியே பிரதானம். நெருக்கடியான நேரங்களில் கூட நகைச்சுவையை வரவழைத்து விடுகிறார். ஆனால், மனைவிக் கூறியதை  தங்கையிடம் 'போட்டுக் கொடுத்து', இரவில் வாங்கிக் கட்டிக் கொள்ளும் போது, '' நான் வேற மாரிங்க!" என்பது போல முக பாவனையில் variety காட்டினார். சிரிக்க வைத்தவன் சிக்கிக் கொண்டானே! என கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. இந்த ஆளின் சேஷ்டைகளைப் பார்க்கையில் பலருக்கு அவர்களின் வாழ்க்கைச் சூழல் நினைவுக்கு வந்து போயிருக்கும். நீங்க நல்லா வருவீங்கோ தம்பி!




ஹேமாஜி

துரு துருவென துள்ளி வரும் பாசக்காரி. இளம் திறமையாளர்களில் வெகு இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துபவர். தொகுப்பாளியாக இருந்த போது உட்பட பல சமயங்களில் நான் பார்த்து வியந்திருக்கிறேன்.  காட்சிகளையும் வசனங்களையும் அநாயசமாக அடித்துப் போட்டு போய்க் கொண்டே இருப்பார். இதிலும் அப்படியொரு கதாபாத்திரம் தான். ஆனால், அவ்வப்போது கணவனுடன் மல்லுக் கட்டுகிறார். படுக்கையறை சண்டைக் காட்சியில் நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசியிப்பார் என நினைக்கிறேன். ஆனால் அந்த இடத்தில் மட்டும் ஏதோ இயல்பு மீறல் மாதிரியே வியனுக்குப் பட்டது. கொஞ்சம் விட்டால் பெரிய ரவுண்டு வந்து விடுவார்.     


ஜாஸ்மின் மைக்கல்

வழக்குரைஞராக வருபவர், feel cool factor தருபவர். சிரித்த முகத்தோடு சிக்சர் அடிக்கிறார். இயல்பு ஈர்க்கிறது. உற்றத் தோழிகளோடு உரிமையோடு உறவாடும் போது இரசிக்க வைக்கிறார். அளவாக advice செய்கிறார். போகப் போக இவரின் கதாபாத்திரம் கதை சொல்லும் என எதிர்பார்க்கலாம். 


மூன் நிலா




அவ்வப்போது கொஞ்சம் வெகுளித்தனம்; கொஞ்சம் கோபம்; கொஞ்சம் கடுப்பு; கொஞ்சம் ரொமாண்டிக் என நேரில் பார்ப்பதை போன்றே வந்துப் போகிறார். சந்தேகப் பேர்வழி கணவனிடம் சிக்கித் தவிப்பதில் நிறைகிறார். வசன உச்சரிப்பும் உடல் மொழியும் கச்சிதம்.
   




ஸ்ரீ குமரன் முனுசாமி

Mr Urrr.... என்று தான் இவரை சொல்ல வேண்டும். " என்னடா, இவன் எப்ப பார்த்தாலும் மூஞ்சியை இப்படியே உர்ருனு வெச்சிருக்கான், சிரிக்கவே மாட்டானா, கடுப்பா!" என்று பார்ப்போரை கடுப்பேத்தும் கேரக்டர். Possessiveness ரகத்திலும் இது வேறு மாதிரியான வகையறா! அப்படி கடுப்பேத்துவதின் மூலம் நடிப்பில் வெற்றிக் கண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து பார்ப்பவன் என்ற அடிப்படையில், நடிப்பில் குறிப்பாக முக பாவனை மற்றும் உடல் மொழியில் பெரிய முன்னேற்றம். வளர்த்துக்  கொண்டால் மேலும் வளரலாம். 


ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி



வாப்பா... உயர்ந்த மனிதா! நான் உரிமையோடு கூப்பிடும் பாசக்கார பையன். CCTV மூலம் வீட்டில் இருக்கும் மனைவியை கண்காணிக்கும் அளவுக்கு 'கங்காணி'. பேச்சின் மூலமும் முக காட்டத்தின் மூலமும் இல்லாளை உண்டு இல்லை என பண்ணி வருகிறார். சிறப்பானதைக் கொடுக்க முயற்சி செய்கிறார். சில இடங்களில் இயற்கையாக இல்லையோ என வியன் நினைக்கிறான். அதற்கு வசனங்களும் காரணமாக இருக்கலாம். ஹீரோ லுக்கில் இருப்பவர் தொடர்ந்து கற்றுக் கொண்டால் நடிப்புத் துறையில் மிளிர வாய்ப்புண்டு. 



அகல்யா மணியம்



வெண்பாவிலும் ஜாங்கிரியிலும் அவ்வளவாக என்னை ஈர்க்காதவர் இம்முறை Thumbs Up வாங்கி விட்டார். சதா உர்ருனு இருக்கும் காதலனை மேலும் உசுப்பேத்தாமல் பேசும் விதமாகட்டும், Cool செய்வதாகட்டும், கண்களாலும் உடல் மொழியாலும் சபாஷ் பெறுகிறார். நடிப்பில் நல்ல முன்னேற்றம். பல இடங்களில் இயற்கையாகவே தெரிகிறது வசன உச்சரிப்பு. வாழ்த்துகள் அகல்யா! 



மலர்விழி ஷண்முகம்


ஜாம்பவானின் வாரிசு ஆயிற்றே! சும்மாவா? 90-களில் நான் மிகவும் விரும்பிப் பார்த்த உள்ளூர் நடிகைகளில் இவரும் ஒருவர். எந்த இடத்திலும் இவரிடம் 'ஓவர்' என்பதை பார்க்க முடியாது. அத்தனை நியாயம் செய்வார். இவரின் தேர்வு, படக்குழுவினர் அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தைப் புலப்படுத்துகிறது. குறிப்பாக கோயில் காட்சியில், "அடிப் போடி!" என்று நம்ம காந்திமதி அளவுக்கு அநாயசமாக வசனம் பேசுவதை வியன் ரசித்தான். வழக்கமான அம்மாவாக வந்து விட்டுப் போவது வேறு, தடத்தை அழுத்தமாக பதிந்து விட்டுப் போவது வேறு. அதில் இந்த குட்டி ஜாம்பவான் இரண்டாவது ரகம். கனமான கதாபாத்திரங்களில் இனி அடிக்கடி உங்களை பார்க்க வேண்டும்.      



நண்பர் Seelan Manoheran, James-சின் அலுவலகத் தோழியாக வருபவர் உட்பட எல்லாருமே உழைத்திருக்கிறார்கள். சிலர் வியன் பட்டியலில் விடுபட்டிருக்கலாம். ஆனால், எந்தக் குறையும் இல்லாமல் உங்களுக்குக் கொடுத்தவற்றை நிறைவாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். 

என்னடா, எல்லாமே சூப்பரோ சூப்பர் என்ற ரேஞ்சில் பேசுகிறானே வியன் என வியக்க வேண்டாம். நிச்சயம் இருக்கிறது, இல்லாமல் இருக்குமா?

வசனங்கள் பொதுவில் ஈர்க்கின்றன; ரசிக்க வைக்கின்றன; நம்மை மீறி சிரிப்பை வரவழைத்து விடுகின்றன. என்றாலும் ஒரு சில இடங்களில் இயல்பாக இல்லை. ஓரிரண்டு கதாபாத்திரங்கள் ஆரம்பம் முதலே ஒரே பாணியில் பயணிக்கின்றன. என்னதான் அது அந்தந்த கதாபாத்திரத்தின் இயல்பு என்றாலும், ஏற்ற இறக்கம் இல்லாம அதே பாணியால் சலிப்புத் தட்டி விடும். 

மற்றவற்றை நேரில் சொல்கிறேன்! 


Dr விமலா பெருமாள்

எல்லாராலும் எல்லா நேரத்திலும், எல்லா துறைகளிலும் சாதிப்பதென்பது ரொம்பவே கடினம் ( முடியாது என்றில்லை, கடினம் என்கிறேன்) அப்படி பெரியத் திரையில் சாதித்த உங்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்பதை தைரியமாகச் சொல்லலாம். ரசிகர்களை ஆச்சரியப்படுத்தப் போகிறேன் என்றில்லாமல், சாதாரண கதையையும் களமாக்கி கபடி விளையாட முடியும் என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். நடிகர்கள் தேர்வில் சிரம் எடுத்திருக்கிறீர்கள். சீனியர் ஜூனியர் கலவையாகக் கொடுத்திருக்கிறீர்கள். முயற்சிக்கு வாழ்த்துகள்.

டெனிஸ்

இதே வேகத்தில் போனால் 'வீடு தயாரிப்பு நிறுவனம்' எல்லா வீடுகளிலும் போய் சேர்ந்து விடும் போலிருக்கிறது. வாய்ப்புகள் கிடைக்கும் போது, இது போன்று சிறப்பாகப் பயன்படுத்தி தரமானவற்றைத் தந்தால் ரசிகன் நிச்சயம் thumbs up தருவான். (FINAS வாரிய உறுப்பினராக நியமனம் பெற்றமைக்கு வியன் வாழ்த்துகிறான்)

வரப் போகும் பாகங்கள் கண்டிப்பாக இரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் ( அதிகரிக்க வேண்டும்) ; அதை விட எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யும் என வியன் நம்புகிறான். வியனின் தனிப்பட்ட அனுபவத்திலேயே 'தமிழ்லெட்சுமி'க்கு என்று ஒரு புதிய இரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது. அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு உங்களுடையது.


பொதுவில் தமிழ்லெட்சுமி தங்கலெட்சுமியாக வென்றாள்!

வியன் விடைபெறும் முன்,

Title Song-ங்கில் என்னைக் கவிழ்த்து விட்டீர்கள். தானாக அமைந்ததா, அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என தெரியவில்லை. பாட்டை தனியாக ரிலீஸ் செய்யுங்கள்😆

#தமிழ்லெட்சுமி #வீடு #VeeduProduction #Denes #VimalaPerumal

Sunday, 28 June 2020

சின்னத்திரையையும் சிறைப்பிடிப்பாரா ஷாமளன் ?


ன்னங்க வியன், சின்னத்திரை, சிறைனு விடுகதை போடுறீங்கனு கேட்குறீங்களா?

கேட்கனும், கேட்டு தான் ஆகோனும்!   

பின்னே,  எங்களூர் பாகுபலி " என் வீட்டுத் தோட்டத்தில்" புகழ் கார்த்திக் ஷாமளன் சின்னத்திரையில் வெள்ளோட்டம் காண்கிறாரே, அதை எப்படிச் சொல்ல?

ஆம், #EVT மூலம் திரையரங்குகளை அதிர வைத்தவர், தற்போது சின்னத்திரையில் கால் பதிக்கிறார்.

அதுவும் சும்மா இல்லீங்கோ, வேற மாதிரி!

நம் உள்ளூர் தொலைக்காட்சிக்கு சற்றே அந்நியமான அமானுஷ்ய சக்தியைக் கதையாக களம் அமைத்து 'கள்வனைக் கண்டுப்பிடி' என  கைப்படத் தந்திருக்கிறார்.

"அட, ஏதோ, பேய் பிசாசோ இருக்குமோ"னு நினைத்து விடாதீர்கள் .

இது கார்த்திக் ஷாமளன்! அவர் வெயிட் தெரியும்ல.....

ஒரு 'தரமான செய்கை' 💥காத்திருக்கிறது என்பதை கண்டிப்பாக குறைந்தபட்ச உத்தரவாதமாக #வியன் கொடுப்பான்.

அவரின் முந்தையப் படங்களை, குறிப்பாக EVT-யை ( 6 முறை தியேட்டரில் பார்த்தவனாக்கும்)  " நான் பார்ப்பது தமிழ்ப்  படம் தானா? என ஆச்சரியத்தில் திரையங்கின் நாற்காலி நுனி சீட்டில் அமர்ந்து வியந்தவன் என்ற முறையில் அந்த உத்தரவாத்தைத் தாராளமாக தருவான் வியன்.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு களிக்கும் விதமாக , ஜூலை 1 முதல்

"கள்வனைக் கண்டுப்பிடி''  நாடி வருகிறது. 



லிங்கேஸ்வரன் மணியம் ( இந்த மனுஷன் காட்டுல, அண்மைய காலமா மழை அடியோ, அடினு அடிச்சு ஊத்துத்துப்பா! திறமைக்கு தீனி போடும் வாய்ப்புகள் வந்து குவிவது, தூரமாக நின்றுப் பார்க்கும் நண்பனுக்கு மகிழ்ச்சியே)  பாஷினி சிவகுமார், மகேஸ் விகடகவி, கே.எஸ்.மணியம் ( Heavyweight Champion ஐயாவும் உண்டு), காந்தீபன் @பென் ஜி, ராஜ் கணேஷ், ரவின் ராவ், சந்திரன், சங்கபாலன், ஆர்.மோகன ராஜ் ( EVT சகோ), கெ.பி.தி(பி.ஏ) ராமசந்தரன், சுபாஷினி அசோகன், ரேன்னி மார்ட்டின், சாய் கோகிலா என சீனியர் - ஜூனியர் கலவையில் நட்சத்திர பட்டாளமே உண்டு.

தையைச் சுருக்கமாகச் சொல்லி ஆவலைத் தூண்டி விட ஆசைதான். ஆனால், பொறவு சுவாரஸ்யம் இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது அல்லவா? எனவே, முதல் நாள் ஒளிபரப்பு ஆகும் போது, தொலைக்காட்சி முன் குடும்ப சகிதமாக ஆஜராகி விடுங்கள். ஐடியா வந்து விடும் ( ஏன், சித்திக்கு மட்டும் தான் காத்திருப்பீர்களா என்ன? 😁 ) 



திங்கள் முதல் வெள்ளி வரை, ஜூலை 1 முதல் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் HD-யில் (231), Astro Go On Demand -டில் ' கள்வனைக் கண்டுபிடி' தொடரை கண்டு மகிழுங்கள். மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை வலம் வாருங்கள். 

ண்மைய காலமாக அதுவும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, #MCO காலத்தில், சமூக வலைத்தலப் பயனர்களே பாராட்டும் வண்ணம் உள்ளூர் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து  ஒளியேறி வருகின்றன. ரசிகர்களின் மனம் கவர்ந்த உள்ளூர் திரைப்படங்கள் ஒரு பக்கம் தனி ஆவர்த்தனம் செய்ய, ஆய்வு நிகழ்ச்சிகள், உள்ளுர் தொடர் நாடகங்கள் என மற்றொரு பக்கம் பட்டையைக் கிளப்பிக்  கொண்டிருக்கின்றன.

ன்னவாக இருக்கும் என்று பார்த்தால், " இதென்ன பிரமாதம்? இனி அடுத்தடுத்து இன்னும் பல புத்தம் புதிய உள்ளூர் நிகழ்ச்சிகள் வரிசைப் பிடித்து வீடு தேடி வரும்" என wanted-டாக வந்து நின்றார் அந்த மனிதர். அட நம்ம பையன் - குப்பு என்கிற குப்புசாமி சந்திரகாஸ். விண்மீன் அலைவரிசை உள்ளடக்கத் தலைவராக உன்னை ( நான் உரிமையோடு கூப்பிடுவேன்) பார்க்கும் போது, உள்ளத்தில் பூரிப்புடா!  

ந்த அதிரடி மாற்றங்கள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளன. வியன் அடிக்கடி சொல்வது போல 'தரமானதைக் கொடுத்தால், தைரியமாக தம்ஸ் ஆப் தருவான் தங்கமான ரசிகன்.'

சரியாக 9 மணிக்கு "கள்வனைக் கண்டுப்பிடி',
வீட்டில் channel-லை மாற்றினால் உருண்டு விழுந்தாவது முரண்டுப் பிடி !

இப்புதியத் தொடக்கம் அடக்கமாக இல்லாமல் அட்டகாசமாக ஆளட்டும், பார்ப்போர் மனதை வெல்லட்டும் எனக் கூறி " விஷான் மீது இனி கவனத்தைத் திருப்புகிறான்  #வியன்!  

Saturday, 27 June 2020

தெறிக்க விடும் Liverpool ரசிகர்கள்!

"போடுறா வெடிய!"
( யாருப்பா நீ? ) 😅

நேற்று அதிகாலை முதலே எங்குப் பார்த்தாலும் #YNWA 'வெடி சத்தம்' தான்!

#Liverpool இரசிகர்கள் சமூக வலைத்தலங்களைத் தெறிக்க விட்டு வருகின்றனர்.

"இருக்காதா பின்னே, தூக்கிட்டாங்கள்ல? "

இந்த 26 ஜூன் 2020 -ஆம் நாள் #லிவர்பூல் இரசிகர்கள் தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகி விட்டது.

கிளப்புகளுக்கு இடையில் போட்டிக்கு வைக்கப்பட்ட எல்லா கிண்ணங்களையும் தனதாக்கி கொண்டு......

Missing List-டில் இருந்த அந்த  'ஒன்னே ஒன்னையும்'  இன்று அடித்துத் தூக்கி விட்டார்களே!

கொண்டாடாமல் என்ன செய்வார்கள்? இது அவர்களுக்கான நேரம் ஆயிற்றே!

தவமாய் தவமிருந்து கிடைத்துள்ள இந்த வெற்றியை நமது உள்ளூர் இரசிகர்களும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

என்னதான் எதிரணி( பரம வைரி) என்றாலும்,  'தொழில் தர்மத்தின்' 😜காரணமாக அவர்களை #வியன் தைரியமாக நெருங்கினான்.

அவர்களின் வெற்றிக் களிப்பு இதோ....

Jeyakumar Athimulam
பெர்னாமா மலாய் செய்தித் தயாரிப்பாளர்


"இது சாதாரண விஷயம் இல்ல. எனக்கு விவரம் தெரியாத வயசுல இருந்து நான் Liverpool ரசிகன். ஏற்கனவே 4-5 தடவை நெருங்கி வந்து தவற விட்டுட்டோம். இப்போ #Klopp  எங்களுக்கு எடுத்துக் கொடுத்திருக்காரு."

"நாங்கள் சந்திக்காத அவமானமா, கேலியா, கிண்டலா? குறிப்பா rivals கிட்ட இருந்து. ஆனால் அதை எல்லாத்தையும் பொறுமையா தாங்கிக்கிட்டு, அதை விட எந்த நேரத்திலும் மத்த டீமுக்கு தாவாம இருந்தோம் பார்த்தீங்கள்ல? அங்க தான் நாங்க நிற்குறோம். அதுக்கான அறுவடையை இந்த சீசன் பார்க்குறோம். ஒரு டீமை எப்படி கொண்டு போகனோம்னு விஷயம் தெரிஞ்ச ஆளையா எங்க Boss-சு. அந்த அளவுக்கு மிகச் சிறந்த Tactician அவரு. ரொம்ப தூரம் போக வேணாம். Henderson, Sadio Mane எல்லாம் சாதாரண கிளப்ல இருந்து வாங்கப்பட்டவங்க. ஆனா #Anfield வந்த பொறவு தான் அவுங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து உருவாச்சு.


அவர் யுக்தியோட பலன் -  #Salah #Mane #Firmino நெருப்பு combination . கடந்த 3 சீசன்ல World level-ல சக்தி வாய்ந்த Combo அவுங்க. இதுவரைக்கும் 31 ஆட்டத்துல 28 நாங்க ஜெயிச்சிருக்கோம்னா, அதுலயே தெரிஞ்சிக்கலாம். 

நீங்க பார்த்துக்கிட்டீங்கனா #ManchesterCity சாதாரண டீம் கிடையாது. ஒரு high profile, energetic ஆன டீமு. அவுங்க நிர்வாகி  பத்தி சொல்லவே வேணாம். Pep Guardiola மிகச் சிறந்த manager.  அப்படிப்பட்ட டீமை 5 points இல்ல, 10 points இல்லீங்க, 20 + புள்ளிகளில் முந்தி போய் நிற்குறோம்னா சாதாரண விஷயம் இல்லை. அப்படி ஒரு சாதனை, கண்டிப்பா சிறந்த நிபுணத்துவம் உள்ள ஒருத்தரால தான் முடியும். அதான் எங்க Klopp. 

வெறும் luck எல்லாம் சும்மா பேச்சு. கடின உழைப்பு வேணும். போன வருஷம் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்துல City கிட்ட தோத்துட்டோம். அந்த தப்பு இந்த வருஷம் நடக்கக் கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தாரு. ஒவ்வோர் ஆட்டமாக போவோங்குறது  தான் அவரோட யுக்தி. 3 வாரம் கழிச்சு City கூட game வருது, United வருதுனுலாம் யோசிக்க மாட்டாரு. அடுத்த game யாரு? சாதாரண Hull City-யா ? Southampton-னா? இப்படி game by game கவனம் செலுத்தி போனதால தான் இன்னிக்கு சாத்தியமாயிருக்கு. இதெல்லாம் முக்கியமான விஷயங்க.

தவிர, ஆட்டக்காரங்க கிட்ட கடுமையாவும் இருப்பாரு, cool-லாவும் இருப்பாரு. ஒரு தப்பு நடந்த நடவடிக்கை எடுப்பார். எந்த நேரத்திலேயும் compromise பண்ண மாட்டாரு.

30 வருஷத்துக்கு அப்பறம் கிடைச்ச இந்த வெற்றி மனப்பூர்வமான வெற்றி. இதை விவரிக்க வார்த்தை இல்லீங்கோனு முடிக்கும் போது... அந்த மனுசன் குரல்ல ஒரு என்ன ஒரு உணர்ச்சி, உற்சாகம் ! 💗

Yugan Kunalan

30 வருஷ எதிர்பார்ப்பு...  சந்தோஷமா கிடைச்சிருக்கு. திருப்தி.கொஞ்ச நஞ்ச தடையா?Covid-னால கப்பு போயிருமோனு நெனச்சேன். ஆனா, எல்லா தடையையும் உடைச்சி, நாங்க Champions ஆயிட்டோம்.   Klopp-ப்புக்கு மிக்க நன்றி. அணியை மிக உச்சிக்கு கொண்டு போயிட்டாரு. இது இப்படியே தொடரனும். "அதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்! அப்டினு சொல்லாமல் சொல்லி முடித்தார் இந்த உயர்ந்த மனிதன்.  😤

Thiagaseelan Ganesan 

" நினைவு தெரிஞ்ச நாள் முதலா எனக்குத் தெரியும்னு சொல்ற ஒரு கால்பந்து கிளப்னா, ஒரு Logo-னா அது லிவர்பூல் தான். என்னதான் கப்பு துக்குனானும், தொட்டக் குறை விட்ட  குறை மாதிரி இந்த பிரியர் லீக் கப்பும் மட்டும் ஒரு பெரிய குறையாவே இருந்துச்சு. அதையும் இன்னிக்கு அடிச்சி தூக்கிட்டோம்ல.  பெரிய சந்தோஷம்;  அதை விட திருப்தியையும் கொடுக்குது, யப்பானு ஒரு பெருமூச்சு கொடுக்குது !".

" நல்ல வேளை இது Covid பீரியட்டா போயிருச்சு. இல்லாட்டினா, எங்க கொண்டாட்டம் இதை விட வேற லெவலா வெறித்தனமா இருந்திருக்கும். இந்த வெற்றிக்கான புகழ் எல்லாம் எங்க ஹீரோ Klopp -க்குத் தான் போய் சேரும்.
Reds நண்பர்களுடன் தியாகசீலன்

Sargunan Elango

( மேலே உள்ள Liverpool Tatto -க்குச் சொந்தக்கார பயப்புள்ள ) 😲 

ந்த 36 வயசுல நான் அனுபவிக்காத சந்தோஷம் இது.  வார்த்தையில சொல்லிட முடியாது. இந்த கிளப்பு என் ரத்தத்தோட கலந்தது. அந்த அளவுக்கு உயிருக்கு உயிரா பார்ப்போம்.

எவ்வளவோ கப்பை தூக்கிட்டோம், ஆனா எங்க Trophy  அலமாரில ஒன்னே ஒன்னு மட்டும் மிஸ்சிங். இத்தனை வருஷமா உள்ளேயே வருத்திக்கிட்டே இருந்துச்சு. என்னிக்கு தீருமோ இந்த குறைனு.... காத்திருந்தோம், பொறுமையா!

இடையில எவ்ளோ அவமானங்கள்! இந்த பிரிமியர் லீக் era வந்ததுல இருந்து, நாங்க லீக் கப்பை தூக்கலேனு சொல்லி சொல்லியே அவமானப்பட்டு பல வருஷங்கள் ஒடிருச்சு. இப்போ கப்பை தூக்கிட்டோம் ல, எங்க அலமாரி நிறைஞ்சிருச்சு, எங்க மனசும் நிறைவாயிடுச்சு!  

இனி இந்த பிரபஜ்சத்துல The Best Team அப்டினா அது நாங்க தான்! இதை ரொம்பவே தைரியமா மட்டுமில்ல திமிராவே சொல்லுவேன்.

( உன் தைரியம் நல்லாவே தெரியுதப்பா! உடம்புல இத்தனை பச்சைக் குத்தியிருக்கியே, அது கூடவா எனக்குப் புரியாது ?) 😱


Liverpool ரசிகர்கள் be like 😚


தயா , பூச்சோங்



" Champions League, Super Cup, Club World Cup எல்லாத்தையும் அள்ளிட்டோம், இன்னிக்கு Premiere Leage-க்கையும் அடிச்சு துள்ளிட்டோம்ல. போன வருஷம் ஒரே புள்ளியில மிஸ் பண்ணிட்டோம். அதை இந்த வருஷம் வேற லெவல்ல சரி பண்ணிட்டோம். இன்னும் என்னங்க சொல்றது, எங்க எல்லாருக்கும் திருவிழா தான் போங்க !"

 



Sarankumar Manokaran

னந்தக் கண்ணீரில் திளைத்திருக்கிறார் மனிதர்.

" என்னவோர் உணர்ச்சிப் பூர்வமான தருணம் இது. 30 ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. நாங்கள் சந்திக்காத அவமானமா, கேலியா கிண்டலா? ஆனால் எந்த நேரத்திலும் எங்கள் அணியை விட்டுக் கொடுத்ததில்லை. எங்கள் கனவு நனவாகக் காரணமான நிர்வாகி Jurgen Klopp-புக்கு நன்றி. எங்கள் Captain Marval #StevanGerrad -டுக்கும் நன்றி!


Saravanan Muniandi 


" போய் சொல்லு, 30 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தோமோ, அதே வேகத்தோட வந்து டைட்டலை தூக்கிட்டோம்னு போய் சொல்லு. ஹா, ஹா ஹா... இது எப்படி இருக்கு!" கபாலி ரேஞ்சுக்கு போய் விட்டார் ஆசிரியர் சரவணன்.








" 30  வருடங்களுக்குப் பிறகு வெற்றியயைத் தொட்டிருக்கிறோம். அவ்வளவும் கடின உழைப்பு, மனம் தளராமை. இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பொன்னாள். இந்த கொண்டாட்டத்தை உலகமே கொண்டாட வேண்டும். அனைத்து ரசிகர்களும்மும் மனமார்ந்த வாழ்த்துகள்! YNWA "



John Bosco 

" 30 வருஷத்துக்கு அப்பறம் பெருமையா காலரை தூக்கிட்டு நடந்து போறோம். இது சாதாரண ஜெயிப்பு இல்ல தம்பி, ஜெயிப்புனா ஜெயிப்பு, அப்படியொரு ஜெயிப்பு. சும்மாலாம் கிடைச்சிடல.  சாதிக்கனும், சாதிச்சே ஆகனுங்கிற mentality. 

இந்த வெற்றியால நாங்க அனுபவுக்கிற சந்தோஷத்தை வார்த்தையில சொல்லிட முடியாது.  4 வருஷத்துக்கு முன்னாடி பார்த்தீங்கனா, Europa League finalist, Carling Cup finalist, Champions League finalist, கடந்த வருஷம் வின்னர். Clup World Cuo winnar, Super Cup winnar. இன்னிக்கு பிரியமர் லீக்கிம் வின்னர் இங்கிலாந்தின் mannar. இனி இந்த கப்போட நடந்து போக போறோம். 


இதுக்கு அப்புறமும் தனியா போக மாட்டோம். கோப்பைக்கு அப்பறம் கோப்பை. இன்னும் 10 வருஷதது கேபிடன் நெரைச்சிருக்கும். Master of philopser, Master of tactticioam. இடுக்க வரைக்கும் தொட முடியாது டா.


Saravanan Ramachandran

"1990 ஆம் ஆண்டு கருத்தறிந்து லிவர்ஃபூல் இரசிகனாய் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த காலம் அது. அன்று தொட்டு இன்றுவரை லிவர்ஃபூல் குழுவின் தீவிர இரசிகன். 1990 ஆம் ஆண்டுதான் லிவர்ஃபூல் குழு இறுதியாக லீக் கிண்ணத்தை வென்றது. அதன் கனவு 30 ஆண்டுகள் கழித்து இன்றுதான் நிறைவேறியுள்ளது. இஃது அவர்களின் கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த லிவர்ஃபூல் இரசிகர்களின் கனவு, ஆசை, வேட்கை, வெறி என எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.

அணியின் மேலாளர் ஆகட்டும், ஆட்டக்காரர்கள் ஆகட்டும், இரசிகர்கள் ஆகட்டும் இவர்களின் கூட்டு முயற்சியே லிவர்ஃபூல் அணியின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எந்தச் சூழலிலும் அணித் தாவாதவர்கள் நாங்கள்!

30 ஆண்டுகளாக அவமானங்கள் அடையாளமாகி போயின. ஆனால் இன்று ஒட்டுமொத்தமாக அறுவடை செய்து விட்ட திருப்தி.

இன்னும் ஏழு ஆட்டங்கள் கையில் இருக்க கிண்ணத்தை முத்தமிடும் முதல் குழுவாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றோம். காத்திருப்புக்கான பலனை முழுமையாக உணர்கின்றோம். இவ்வெற்றியைக் கொண்டாடுங்கள். வெளியில் அல்ல. உள்ளத்திலும் மூளையிலும் வைத்துக் கொண்டாடுங்கள். இது நமக்கான வெற்றி. லிவெர்ஃபூல் அணிக்கான வெற்றி. உங்களுக்கான வெற்றி’ என்று இவ்வெற்றியைத் தனதாக்காமல் பொதுவாக்கிய ஜெகென் குலோப் லிவர்ஃபூல் காற்பந்து வரலாற்றில் நீங்கா இடம் பெற்று உயர்ந்து நிற்கிறார்.

" வாழ்வோ தாழ்வோ, கொண்டாட்டமோ திண்டாட்டமோ ‘நாங்கள் தனியாக நடப்பதில்லை!" ( சும்மா நச்சுனு சொன்னாருல்ல 👌 )


Saravanan Narayanasamy

2003 ல இருந்து பார்க்க ஆரம்பிச்சிசேன். #RafaBenitez நிர்வாகியாக இருந்தப்ப தான் தீவிர ரசிகனா நான் மாறுன காலக்கட்டம்.

என்னதான் ஐரோப்பா அளவுக்கு challenge பண்ற அணியா இருந்தாலும் உள்ளூருல கப்பு தூக்க முடியலையேங்குற வருத்தம். அது மனசை ரொம்பவே வருத்திக்கிட்டே இருந்துச்சு.

இருந்தாலும் முயற்சியை கைவிட்டதே இல்ல. இதுக்கு முன்னாடி கூட ஆக best-டா ரெண்டாவது இடமே கிடைச்சது. போன வருஷம் கடைசி வரைக்கும் மோதி ஒரே ஒரு  புள்ளி வித்தியாசத்துலா தோத்துட்டோம்.

அதுக்கெல்லாம் சேர்த்து தான் இந்த வருஷம் செஞ்சிட்டோம். அதுவும் ரொம்ப சீக்கிரமா அதாவது 38 ஆட்டத்துல 31 ஆட்டம் முடியும் போதே கப்பைத் தூக்கிட்டோம்ல. எனக்குத் தெரியும் எப்படியாவது ஜெயிச்சிருவோம்னு, ஆனா இவ்வளவு ஒரு சிறப்பான வெற்றியா அது இருக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல.

சீசன் ஆரம்பத்துல அதிரடியாக இருந்து வழக்கமா ஜனவரில நாங்க சறுக்குவோம். ஆனா, எங்க Boss-சு fix பண்ணிட்டாரு.  இனி அங்க தான் பிக்கப் பண்ற
காலமா அதை மாத்திட்டாரு. தோல்வியில்லாம முடிப்போம்மனு நெனச்சோம். பரவாயில்லை. கோரோனாவுக்கே tough கொடுத்து தூக்கிட்டோம்ல :-) 

( என்ன தம்பி, கப்பு ஜெயிச்ச சந்தோஷத்துலக டுரியான் பார்ட்டியா? நடத்து நடத்து!)


Jai Ganesh 

" ஒரு வருஷமா 2 வருஷமா..... 30 வருஷம் சார், 30 வருஷம் ! அந்த பீலிங்கு இருக்கே பீலிங்கு.... உங்களுக்குப் புரியாது சார்!"



சரி சரி எனக்குப் புரியுது...உங்க வீடியோவ பார்த்தேனே. இன்னுமா புரியாம இருக்கும். நடத்துங்க....

அந்த winning moment எப்போதும் கிடைக்காதுல்ல. Enjaaaai.....!


Ari Vanandan


சிறு வயது முதலே நான் Liverpool ரசிகன். கால்பந்தாட்டங்களை விரும்பிப் பார்ப்பேன். அதிலும் லிவர்பூல் ஆட்டங்கள் என்றால் சொல்ல வேண்டுமா? என்னுடைய favorite இன்று வரை Stevan Gerrad தான். சுமார் 30 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இன்று கனவு நிறைவேறியிருக்கிறது. பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றிக் களிப்பை நான் சிந்தியக் கண்ணீர் சொல்லும். 




Dinesh Magandiran

" We finally won ! அடுத்த second-டே கூட்டாளிக்கெல்லாம் கூப்பிட்டு, குறிப்பாக MU Fans கூப்பிட்டு வெச்சு செஞ்சிட்டேன்ல !"


Kenny Dalglish King-னா, Robie Fowler God-னா, Jurgen Kopps is Emperor. Europe Conquer பண்ணிட்டோம், Club World Cup Conquer தான். இப்போ இங்கிலாந்து மண்ணையும்....! 



Palanikumar



இந்த 'உயிர் தொண்டன்' இருக்கிறாரே... வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு ரகம். அணியை நகைத்தால் 'அள்ளு' விட செய்து விடுவார். வழக்கமான ஆட்ட முடிவின் போதே, முகநூலில் 'உலகப் போர்' அளவுக்கு விளாசுவார். கிண்ணத்தையே தொட்டு விட்ட பிறகு சும்மா இருப்பாரா? " யாருக்கெல்லாம் எரிகிறதோ?" என்று சூட்டோடு சூடாக பதிவேற்றியவர், நேராக பினாங்கு  தண்ணீர் மலைக்குச் சென்று விட்டார். முருகனுக்கு நன்றி சொல்லி விட்டு வந்திருப்பார் போல! அனுபவி ராஜா அனுபவி...  ( விரைவில் வியன் விருந்து வைப்பான் )







#வியன் வேற்று அணியைச் சேர்ந்தவனாக இருக்கலாம். ஆனால் விவரம் அறியாதவன் அல்ல. வில்லங்கமானவனும் அல்ல. விநோதமானவன்.

இப்பருவத்தில் Liverpool-லை விட வேறு யார் கிண்ணத்தை வென்றிருந்தாலும் அது கால்பந்துக்கான தோல்வியாகத் தான் அமைந்திருக்கும்.

அந்த அளவுக்கு பருவம் தொடங்கியது முதலே அது வெளிப்படுத்திய ஆட்டம் அப்படி. தாக்குதலாகட்டும், தற்காப்பாகட்டும், மத்தியத் திடலாகட்டும், கோல் காவலாகட்டும், எல்லா பக்கமும் பக்காவாக கட்டமைக்கப்பட்ட அணியாகத் தான் வலம் வந்தது. இதை பரம எதிரிகளும் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

கடந்தப் பருவ #ChampionsLeage இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் Barcelona-வை பந்தாடிய போதே, #வியன் அறிவான்... ' பெரிய சம்பவம் ஒன்னு காத்திருக்குனு!"  அது தான் நடந்தேறியிருக்கிறது.

வாழ்த்துகள், இது உங்களுக்கான நேரம்!


- வெற்றிக்  களிப்புத் தொடரும்!

#Liverpool #LiverpoolFC #LIV #லிவர்பூல் #பிரிமியர்லீக் #ChampionsOfEngland #TheReds #KingOfEurope